நின்றாள் சரண்யா.
“எனக்கு இவ்வளவு மரியாதை எல்லாம் வேண்டாங்க... உட்காருங்க... மைத்ரேயி மேடம் ஜி.எஸ்னா கிண்டில இருக்க ஆட்டோ பார்ட்ஸ் கம்பெனியான்னு கேட்குறாங்க...”
அவர் கையிலிருந்த ஃபோன் ரிசீவர் உள்ளே இருந்து கேள்வி வந்திருப்பதை உணர்த்த, “ஆமாம், அதே தான்... அவங்களை கொஞ்சம் அவசரமா பார்க்கனும்னு சொல்றீங்களா?” என்றாள் சரண்யா!
“சொல்றேன்... நீங்க உட்காருங்க...”
“தேங்க்ஸ்ங்க...”
செக்யூரிட்டி தலை அசைத்து விட்டு ஃபோனில் பேசினார்.
மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள் சரண்யா! அது என்னவோ ஃபோகஸ் எலெக்ட்ரானிக்ஸின் கட்டிடத்திற்கு உள்ளே போவதற்கு முன்பே, இங்கே அனைத்துமே வெகு இயல்பாக இருப்பதாக அவளுக்கு பட்டது!
அது சரி, ஜூவில் இருந்து தப்பி வந்தவளுக்கு வேறு எப்படி இருக்கும்! என்று மனதில் எழுந்த எண்ணத்திற்கு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்!!!!
ஐந்து நிமிடங்கள் செல்ல, “மேடம் வர சொன்னாங்க... வாங்க கெஸ்ட் பாஸ் போட்டு தரேன்,” என்றார் அவளிடம் முதலில் பேசிய செக்யூரிட்டி. ஆச்சர்யமாக இருந்தாலும் அவரின் பின்னே சென்றாள் சரண்யா.
ஃபோட்டோ எடுத்து, அவள் பெயரில் கெஸ்ட் பாஸ் பிரின்ட் செய்து, சின்ன பிளாஸ்டிக் கவரினுள் போட்டுக் கொடுத்தார் அவர்.
“பின் செய்துக்கோங்க... அங்கே ஆஃபிஸ் டெஸ்க்ல இருக்க செக்யூரிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவங்க...”