(Reading time: 7 - 14 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

   

“சரிக்கா, இனிமேல் நீங்க கேட்காம தேங்க்ஸ் சொல்ல மாட்டேன் போதுமா?” என்று சிரிப்புடனே சொன்னாள்.

   

“ரொம்ப நல்லதா போச்சு... போ...” என்று அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டாள் சுலோச்சனா.

   

“சரிக்கா, மேடமை ரொம்ப நேரமா நிற்க வச்சு பேசிட்டே இருக்கேன்... அப்புறமா வரேன்,” என்று சுலோச்சனாவிடம் சொல்லி விட்டு, மைத்ரேயியிடம்,

   

“வாங்க மேடம், வீட்டுக்கு போகலாம்” என அழைத்தாள் சரண்யா.

   

சுலோச்சனாவிடம் விடை பெற்று விட்டு சரண்யாவுடன் அவள் வீடு நோக்கி நடந்தாள் மைத்ரேயி.

   

✽✽✽

   

சரண்யாவின் வீடு சுத்தமாக இருந்தது!

   

ஹாலின் நடுவே கோபியின் பெரிய சைஸ் படம் மாட்டப்பட்டிருந்தது!

   

“வீட்டு அட்ரஸ் எப்படி தெரிஞ்சது மேடம்?”

   

சரண்யாவின் கேள்வியில் வீட்டை பற்றிய ஆராய்ச்சியை நிறுத்திய மைத்ரேயி,

   

“நீங்க கொடுத்த பயோடேட்டால இருந்தது,” என்று அவளுக்கு பதில் சொன்னாள்.

   

“அட ஆமாம் அதை மறந்தே போயிட்டேன் மேடம்...”

   

“ஒரே நாள்ல மறந்துட்டீங்களா???? ஆச்ர்யமா இருக்கே... ஏன் அந்த சிடுமூஞ்சி இன்னைக்கும் டார்ச்சர் செய்துட்டானா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.