ப்ராடக்ட்ஸ், சர்க்யூட்ஸ் எல்லாத்தையும் மற்ற கம்பெனிஸ், ஐஐடி, அண்ணா யுனிவர்சிட்டின்னு போய் டெமோ காமிக்கனும்... அவங்க தர ஃபீட்பேக் நோட் செய்துட்டு வந்து சொல்லனும்... என்ன ஓகேவா?” என்றாள்.
மைத்ரேயிக்காக ரெடிமேட் ஃப்ரூட் ஸ்குவாஷ் கலந்துக் கொண்டிருந்த சரண்யா, அவள் சொன்ன்னதை சின்ன பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்...
“எல்லாமே புரியாத பாஷை போல இருக்கு மேடம்... என் மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கை அளவுக்கு எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கான்னு தெரியலை...”
“சரண்யா, முடியாதுன்னு நினைக்குற எதுவுமே முடியாது தான்! முடியும்னு நினைக்குற எதையும் மொத்த உலகமே எதிர்த்து நின்னாலும் கூட செய்து முடிக்கலாம்... இதை நாம சரித்திரத்துல நிறைய இடத்துல பார்க்கலாம்... தாமஸ் ஆல்வா எடிசனை எத்தனையோ காலமா ஜீனியஸ்ன்னு சொல்றோம்... ஆனால் அவர் டெஸ்லா கண்டுபிடிச்ச அல்டேர்நெடிங் கரண்ட்டை வேஸ்ட்ன்னு சொன்னார்... ஆனால் இன்னைக்கு நாம வீடு ஆஃபிஸ்னு எங்கேயும் டெஸ்லா கண்டுபிடிச்சதை தான் யூஸ் செய்றோம்... எடிசன் டெஸ்லாவோட பாஸ்! பாஸ் சொன்னதற்காக டெஸ்லா முயற்சியை கை விட்டிருந்தார்ன்னு வைங்க, நாம எல்லோரும் இன்னமும் எடிசனோட டைரக்ட் கரண்ட் வச்சு திண்டாடிட்டு இருக்க வேண்டியது தான்... உங்களால முடியும்னு நம்புங்க... அங்கேயே 99.9% வேலை முடிஞ்சு போச்சு...”
மைத்ரேயியின் வார்த்தைகள் புண்ணாகி இருந்த சரண்யாவின் மனதிற்கு திடத்தை கொடுத்தது!
கட்டாயம் என்னால் முடியும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்!
“அந்த ஃப்ரூட் ஸ்குவாஷ் எனக்கு தானே... தாங்களேன்... பேசி பேசி தொண்டை வறண்டு போச்சு,” என்றபடி சரண்யாவின் கையில் இருந்த டம்ப்ளரை வாங்கினாள் மைத்ரேயி.
“சாரி மேடம்... இந்தாங்க... உங்களுக்கு தான்,” என்ற சரண்யாவின் முகத்தில் படபடப்பையும் தாண்டி சின்ன புன்னகை தோன்றி இருந்தது.
தன் விளையாட்டு பொம்மையுடன் விளையாடிக் கொண்டே அவ்வப்போது பெரியவர்கள்