(Reading time: 7 - 14 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

இருவரையும் பார்த்திருந்த நிஷாவிற்கு அம்மா முகத்தில் வந்திருந்த புன்னகையை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது!

   

எப்போதும் சிரிப்பே இல்லாமல் இருக்கும் அம்மாவின் முகத்தில் இன்று இரண்டு முறை சிரிப்பு வந்திருக்கிறதே!

   

இந்த ஆன்ட்டி ரொம்ப நல்ல ஆன்ட்டி!

   

அந்த பிஞ்சு மனதில் மைத்ரேயி மீது அன்பும், மரியாதையும் தோன்றியது!

   

“...அப்புறம் சேலரி ட்வென்டி தவ்சன்ட் செட் செய்திருக்கேன்... கொஞ்சம் அதிகம் தான்... ஆனால் உங்களுக்காக... உங்க மேல வச்சிருக்க நம்பிக்கையால கொடுக்குறேன்... என் எதிர்பார்ப்பை உங்க திறமையால நிறைவேத்துவீங்கன்னு நம்புறேன்...”

   

மைத்ரேயி சொன்னதை கேட்ட சரண்யாவின் கண்கள் விரிந்தன...!

   

“கட்டாயம் செய்வேன் மேடம்... உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்,” என்று மைத்ரேயியிடம் சொன்னவளின் குரலில் இப்போது உறுதி இருந்தது.

   

✽✽✽

   

அடுத்த நாள் காலையில் மித்ரன் ஃப்ரீயாக இருக்கும் நேரத்திற்காக காத்திருந்து அவனின் அறைக்கு சென்றாள் சரண்யா.

   

“மித்ரன் சார்... எனக்கு வேற வேலை கிடைச்சிருச்சு... நான் என் வேலையை ராஜினாமா செய்றேன்... ஒன் வீக் நோட்டிஸ் பீரியட் போதுமா???”

   

எந்த வித சுவாரசியமும் இல்லாமல் அவளை பார்த்த மித்ரன், “ரொம்ப நல்லதா போச்சு! நோட்டீஸா? அது எதுக்கு? இப்போ மட்டும் நீ என்ன வேலை செய்துட்டா இருக்க? சம்பளம் தான் நான் வேஸ்டா கொடுத்துட்டு இருக்கேன்... அடுத்து போற இடத்திலேயாவது வேலைன்னு எதையாவது உருப்படியா செய்... அந்த கம்பெனியிலேயும் இது போல குளறுபடி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.