(Reading time: 7 - 14 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

   

“ஆமாம்... மத்த நாளை விட நூறு மடங்கு அதிகமான டார்ச்சர்... பழைய ஆர்டர் டீடெயில்ஸ் எல்லாம் ரிப்போர்ட்டா கொடுக்க சொல்லி இருந்தார்... அந்த வேலையை நேத்தே முடிச்சிட்டேன்... அதனால நேத்து டேட் போட்டு இன்னைக்கு ரிபோர்ட்டை கொடுத்தா, அவ்வளவு திட்டுறார்... ஏன், என்னன்னு என்னை பேசக் கூட விடலை... ப்ச்... காலையில இருந்து ஈவ்னிங் கிளம்புற வரைக்கும் அதே போல தான்...”

   

மித்ரனை பற்றி அறிந்தவள் என்பதால் மைத்ரேயி இதை எதிர்பார்க்க தான் செய்திருந்தாள்...

   

மித்ரனால் ஒருவர் மீது அதிக அன்பையும் வைக்க முடியும், வேறொருவர் மீது அதிக வெறுப்பையும் வைக்க முடியும்... எதிலுமே அவனுக்கு எக்ஸ்ட்ரீம் தான்!

   

நேற்று அவனிடம் சரண்யா பற்றி சொல்லி இருந்ததால் இன்று அவளை காய்ச்சி எடுப்பான் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள்...

   

ஏதோ அதுவரையில் அவள் அவனின் தங்கை என்று சொல்லாமல் விட்டானே...!

   

சரண்யா இப்போது சொன்ன விபரத்தைக் கேட்டு மைத்ரேயிக்கு மித்ரன் மீது இன்னும் அதிகமாக கோபம் வந்தது...!

   

சரண்யாவிடம் போய் என்ன மாதிரியான வேலையைக் கொடுத்திருக்கிறான்!

   

அவனுடைய மனசாட்சியை வாடகைக்கு விட்டிருப்பானோ?

   

மனதினுள் அண்ணனை அர்ச்சனை செய்த மைத்ரேயி, சரண்யாவிடம்,

   

“அவன் கிடக்குறான் விடுங்க சரண்யா... உங்க வேலை கன்ஃபர்ம்ட்... அதை உங்க கிட்ட நேரா சொல்ல தான் வந்தேன்... உங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பேக்க்ரவுண்ட் இல்லை... கொஞ்சம் ட்ரெயினிங் தேவைப்படும்... மத்தபடி நீங்க பிக்கப் ஆகிடுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! ஜாப்க்கு கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும்... நம்ம கம்பெனில செய்ற சின்ன சின்ன 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.