அதற்கு முக்கிய காரணம் சேலை என்று ரோஷனிக்கு தோன்றினாலும், அவளுக்கும் எப்படியோ போகட்டும் என குழந்தையை விட்டு போக மனம் வரவில்லை!
“இன்னைக்கு அவ என் பக்கத்திலேயே தூங்கட்டும்,” என ரோஷனி சொன்ன போது பூங்கோதைக்கு ஆச்சர்யத்தில் பேச்சே வரவில்லை! அது புரிந்தாலும் எதையும் விளக்காமல் ரேஷ்மியை தன்னுடனே அழைத்து சென்றாள் ரோஷனி.
விமலுக்கும் ஆச்சர்யம் தான்!
ஒருவேளை ரோஷனி அவளின் அண்ணன் குழந்தையை அப்படி அழைத்து வந்திருந்தால் என்ன சொல்லி இருப்பானோ என்னவோ, இது அவனின் அண்ணன் குழந்தை என்ற போது, அவன் மறுப்பாய் எதுவும் சொல்லவில்லை!
ரோஷனிக்கு கமல் தன் குழந்தையை பற்றி கேட்காமலே இருப்பது மனதை உறுத்தியது! ஒருவேளை அவனும் துக்கத்தில் இருப்பதாலாக இருக்கும் என முடிவு செய்து அதை பற்றி யோசிக்காமல் விட்டாள்!
✽✽✽
மறுநாள் கவிதாவும், பூங்கோதையும் ரேஷ்மியை குளிப்பாட்டி ஊட்டி விட, மற்ற நேரங்களில் எல்லாம் ரோஷனியின் பின்னேயே சென்றாள் ரேஷ்மி.
ரோஷனிக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் அன்பு ஆச்ர்யதைக் கொடுத்தது, மனதை அசைக்கவும் செய்தது!
குழந்தையை தூக்கி வைத்து செல்லம் கொஞ்சுவதை தாண்டி அதிக வேலையும் இல்லையென்பதால் எந்த மனக்குறையும் இல்லாமலே ரேஷ்மியை அரவணைத்தாள்!
கவிதா, பூங்கோதை, ரோஷனி என மூவருமாக ஒரு வழியாக ரேஷ்மியை அமைதிப்