(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

சேர்மேன் என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த கதவின் அருகே நின்று தன்னை ஒரு முறை ரிலாக்ஸ் ஆக்கிக் கொண்டு கதவை மெல்ல தட்டினார் ருத்ரபாண்டியன்.

   

“சார், ஐ ஆம் ருத்ரா!”

   

“கம் இன்,” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

   

கதவை திறந்து உள்ளே சென்று, “குட் மார்னிங் சார்... என்னை வர சொல்லி ஈமெயில் அனுப்பி இருந்தீங்க,” என்றார் ருத்ரபாண்டியன் பணிவுடன்.

   

“யெஸ் ருத்ரா, உட்காருங்க,” என்றார் கைலாசமூர்த்தி.

   

ருத்ரபாண்டியன் அமரவும்,

   

“நேத்து ஈவ்னிங் ஜே.யூ க்ரூப்ஸ் சேர்மன் அஸ்வத் என்னை வர சொல்லி இருந்தார். ரிமம்பர் அவரோட கம்பெனிக்காக ஒரு பில்டிங் ப்ளான் லாஸ்ட் வீக் அனுப்பி வச்சோம்,” என்று பேச்சை ஆரம்பித்தார் கைலாசமூர்த்தி.

   

“யெஸ் சார், ஏதாவது ஃபீட்பேக் கொடுத்தாரா சார்?”

   

“பீட்பேக்கா!!! அஸ்வத் புகழ்ந்து தள்ளிட்டார் ருத்ரா! ரொம்ப ஆக்கபூர்வமாகவும், புதுமையாகவும் இருக்காம் அந்த ப்ளான். வெரி குட் ஜாப்!!!!”

   

“தேங்க்ஸ் சார்!”

   

“அந்த ப்ளான் யாரோட ஐடியா?”

   

“என் டீம்ல சினேகான்னு ஒரு ஜூனியர் ஆர்கிடெக்ட்டோட ஐடியா சார். ரொம்ப திறமையான பொண்ணு.”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.