(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 30 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

அடுத்து அவனது குறி கஜா மீது விழுந்தது அவனோ பயத்தில் அலறினான். அதற்குள் சிவா வந்தான்.  போலீஸ் வண்டி வரவும் கஜா அவசரமாக தில்லையிடம் இருந்து ஓடி சிவாவிடம் சென்று 

   

”சார் காப்பாத்துங்க சார்” என கேட்க சிவாவோ

   

”தாராளமா தம்பி வா வா உன்னையும் உன் அண்ணன்கிட்டயே அனுப்பறேன், ரெண்டு பேரும் ஜெயில்ல உட்கார்ந்து கதை பேசுங்க”

   

“நானா நான் எதுக்கு ஜெயிலுக்குப் போகனும், நான் எந்த தப்பும் பண்ணலையே”

   

“ஏன்டா நீ கஜலட்சுமின்னு பெயர் வைச்சிக்கிட்டு, மாறுவேஷத்தில எவ்ளோ பொண்ணுங்களை ஏமாத்தியிருக்க, உன்னை கஜலட்சுமின்னே நாங்க தேடிக்கிட்டு இருந்தோம் ஆனா, நீ பையன்னும் அதுலயும் கருணாவோட தம்பின்னும் எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா எப்பவோ உன்னை பிடிச்சிருப்பேன், இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை உன்னால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க கொடுத்த புகாரை வைச்சி உன்னை நான் அரஸ்ட் பண்றேன் உன் அண்ணனாவது 14 வருஷத்துல வெளிய வந்துடுவான் ஆனா, உனக்கு எத்தனை நாளாகுமோ என்னவோ” என சொல்ல கஜாவோ தப்பிக்க முயல செந்தில் பிடித்துக் கொண்டான்.

   

தில்லையோ சிவாவிடம்

   

”சிவா கஜாவோட வந்த ஆளுங்களை என்ன செய்றது கொன்னுட்டுமா”

   

”வேணாம்டா”

   

”இவங்களை எதுக்கு கைது பண்ற, பணத்தை வைச்சி வெளிய வந்துடுவானுங்க பேசாம இவங்களை இங்கயே கொன்னு புதைச்சிட்டு தலைமறைவுன்னு சொல்லிடலாமே பிரச்சனை முடிஞ்சிடும் சிவா”

   

”அப்படி செஞ்சா இவனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு நியாயம் கிடைக்காதே, இவன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.