”புரியுதுண்ணா நீ கிளம்பு, எல்லாரும் என்ன செய்றாங்க, எங்க இருக்கானுங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்றோம், உனக்கு வேற உடம்பு மோசமாயிருக்கு நீ வீட்டுக்கு போண்ணா” என சொல்ல தில்லையோ அமைதியாக வேறொரு ஜீப்பிற்கு வந்தான். அவன் மிகவும் காயப்பட்டிருந்தான். வலியின் வேதனை அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவனது ஆட்கள் வரவும் சம்யுக்தா உடனே வண்டியை விட்டு இறங்கி நேராக தில்லையிடம் சென்றாள். அவனின் வேதனையைக் கண்டு இரக்கப்பட்டாள்.
”ரொம்ப வலிக்குதா” என அக்கறையாக கேட்க அவனோ ஆம் என தலையை மட்டும் ஆட்டினான்
அவள் அங்கு இருப்பதைக் கண்ட அனைவருமே அதிர்ந்தார்கள் அதிலும் சிவாவோ தில்லையை திட்டினான்
”இவளை ஏன்டா கூட்டிட்டு சுத்தற, இவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னாயிருக்கும்”
”பாட்டி கூப்பிட்டாங்கடா அதான் இவளை கூட்டிட்டு போய் அங்க விடலாம்னு நினைச்சேன் ஆனா, அதுக்குள்ள இவ்ளோ நடந்துடுச்சி“
”இந்த நிலைமையில நீ பாட்டியை பார்க்கப் போகனுமா“
”இல்லை நான் வீட்டுக்குப் போறேன், இங்க நடந்த எதுவுமே பாட்டிக்கு தெரிய வேணாம், தெரிஞ்சா வருத்தப்படுவாங்க சரி நான் கிளம்பறேன், நீயும் கொஞ்சம் கவனமா இரு உன்னை யாராவது ஏதாவது செய்திடப் போறானுங்க“
“நீயிருக்கறப்ப எனக்கென்ன கவலை, நீ பத்திரமா போ, போற வழியில எவனாவது வந்துடப் போறான்“
“எனக்கு ஒண்ணும் ஆகாது” என சொல்லிவிட்டு சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு இன்னொரு ஜீப்பில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.