விசயத்தை நான் பார்த்துக்கறேன்” என சொல்லியவன் கஜாவையும் அவனது ஆட்களையும் கைது செய்து தன் வண்டியில் ஏற்றினான்.
அடுத்து தில்லையின் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிவாவோ அதிர்ந்தான்
”தில்லை வேணாம் இவனுங்களை நான் பார்த்துக்கிறேன் விட்டுடு” என சொல்ல அவனோ சரியென்றான்.
தனது ஆட்களிடம்
”ஜீப் ரிப்பேர் ஆயிடுச்சி, அதை சரி பண்ணி கொண்டு வாங்க” என ஒருவனிடம் சொன்னான் இன்னொருவனோ தாங்கள் வந்த ஜீப்பின் சாவியை தர அதை வாங்கியவன் அவர்களிடம்
”இனி பொறுமையா இருக்கறதுல எந்த பிரயோசனமும் இல்லை விட்டா ஒவ்வொருத்தனா முளைச்சி வருவானுங்க, பழிவாங்கறேன்னு கிளம்புவாங்க இனி தாமதிக்க வேணாம், நம்மாளுங்க எல்லாரையும் கூப்பிடுங்க நான் சொல்றதை செய்ங்க“
”என்ன அண்ணா செய்யனும்”
”என்னோட எதிரிகளை அழிக்கனும், எவனெவன் என்ன செய்றான், எங்க இருக்கான்லாம் கண்காணிங்க, ஒவ்வொருத்தனா தேடி போய் போடறதுக்குள்ள இன்னொருத்தன் என்னை கொல்ல வர்றான், அதனால ஒரு நாள் பார்த்து எல்லாரையும் ஒரு இடத்தில வரவழைச்சி அழிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“ஒரே இடத்திலயா அண்ணா அது ரிஸ்க்ணா”
”அப்ப ஒரே சமயத்திலயாவது எல்லாரையும் போட்டுடலாம்”
”அதுவும் சரியா வருமாண்ணா”
”இல்லைன்னா இவனுங்களை அழிக்கறது கஷ்டம் புரியுதா“