(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

அவனுடன் ஒருவன் பாதுகாப்புக்காக பின்சீட்டில் ஏறிக் கொண்டான். பாட்டி வீட்டிற்கு செல்லாமல் வந்த வழியிலும் செல்லாமல் வேறு வழியாக வண்டியை திருப்பிக் கொண்டுச் சென்றான் தில்லை.

   

போகும் வழியில் அவன் எதுவும் பேசவில்லை, சம்யுக்தாவும் அவனது காயத்தைக் கண்டு பயந்திருந்தாள் ரத்தத்தைக் கண்டதும் அவளுக்கு பயம் வந்தது. உடல் நடுங்கியபடி இருந்தாள். அவளுக்காகவே ஊருக்குள் வண்டியை செலுத்தினான். அவளும் அக்கம் பக்கம் மக்கள் இருப்பதைக் கண்டு

   

”ஊருக்குள்ள ஏன் போறீங்க, இது ரிஸ்க்காச்சே உங்க எதிரி உங்களை பிடிச்சிடப் போறாங்க”

   

”எனக்கு என்னை விட நீதான் இப்ப முக்கியம், உன்னை பத்திரமா வீட்ல விடற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது“

   

”நான் என் வீட்டுக்கு போக மாட்டேன், உங்ககூடதான் இருப்பேன், எனக்கு நீங்க நியாயம் வழங்கித்தான் ஆகனும்“

   

”நான் வீடுன்னு சொன்னது என் வீட்டைதான் போதுமா அமைதியா வா, என்னால பேச முடியலை“

   

”ஏன் என்னாச்சி” என அவனையே ஏற இறங்கப் பார்த்தாள் அவன் அணிந்திருந்த சட்டையில் ரத்தத்துளிகள் இருக்கவே அவளுக்கு நடுக்கம் அதிகமானது

   

”ஆஸ்பிட்டலுக்குப் போலாமா”

   

”வேணாம் அது ரிஸ்க்” என சொல்லிக் கொண்டே வண்டியை ஒரு கட்டிங்கில் திருப்பினான் எதிர்பாராத விதமாக எதிரே வந்த வண்டியின் மீது மோதினான். முதலில் தன் தவறு என நினைத்தான் ஆனால் அதில் வந்தவர்கள் வேண்டுமென்றே தன் வாகனத்தின் மீது மோதினார்கள் என புரிந்துக் கொண்டான். பின் சீட்டில் இருந்த தில்லையின் அடியாளோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.