(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”அண்ணா அவங்க நம்மளை போட வந்திருக்காங்க”

   

”மக்கள் கூட்டம் இருக்கற இடம் இது, நம்மால யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது” என சொல்லியபடியே வண்டியை ரிவர்ஸிலேயே ஓட்டினான். எதிரியின் வண்டியும் முன்னேறி வந்து ஒவ்வொரு முறையும் தில்லையின் வண்டியை மோதியது. அதனால் வண்டி நிலைதடுமாற எப்படியோ வண்டியை கவிழ்த்துவிடாமல் பார்த்து பக்குவமாக ஓட்டிக் கொண்டு ஒரு பக்கம் இருந்த தெருவுக்குள் சட்டென நுழைந்தான். அதில் அவனை இடிக்க வந்த வண்டியும் வேறு பக்கம் சென்றது 

   

அதில் தில்லை உடனே தனது வண்டியை வேறு பக்கம் செலுத்தினான். ஆனாலும் அவன் பின்னால் வண்டி ஒன்று தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தான், அவனால் வண்டியை ஓட்ட முடியவில்லை மயக்கம் வருவது போல இருந்தது அதனால் அவன் தனது ஆளிடம்

   

”டேய் வெளிய குதிடா” என சொல்ல அவனோ சட்டென கதவை திறந்து வெளியே குதித்து தப்பித்தான்.

   

அடுத்து சம்யுக்தாவிடம்

   

”சம்யுக்தா அங்க பாரு காலி இடம் வருது, கதவை திறந்து குதிச்சிடு“

   

”முடியாது எனக்கு பயமாயிருக்கு”

   

”குதிம்மா ஆளுங்க வந்துட்டாங்க, என்னாலயும் வண்டியை சரியா ஓட்டமுடியலை, குதி உனக்கு ஒண்ணும் ஆகாது நீ விழுந்தாலும் சின்ன சின்ன காயம்தான் படும், உயிருக்கு சேதாரம் ஆகாது குதி” என சொல்ல அவளோ பயந்தாள்

   

”நீ குதிச்சா நானும் இன்னொரு பக்கம் குதிச்சிடுவேன், ரெண்டு பேரும் தப்பிச்சிக்கலாம் குதிம்மா” என சொல்ல அவளோ பயந்தாள். அஞ்சினாள் வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் வண்டியில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.