“அஸ்வத்தோட பேச்சுல இருந்தே என்னால அதை புரிஞ்சுக்க முடியுது. பை தி வே, அஸ்வத் ரெக்கமென்டேஷன்ல நமக்கு இன்னொரு பெரிய ப்ராஜக்ட் கிடைச்சிருக்கு. ஆகாஷ் ரீடேயிலர்ஸ் தெரியுமா?”
“தெரியுமே சார்!”
“அவங்களோட மால்க்கு மல்டி லெவல் பார்க்கிங் ப்ளான் செய்யனுமாம். ரிஸ்க் இருக்க ப்ராஜக்ட். நாம சரியா செய்யனும்!”
“செய்யலாம் சார். நம்ம கிட்ட அனுபவம் இருக்க நிறைய ஆர்கிடெக்ட்ஸ் இருக்காங்க.”
“இல்லை ருத்ரா, நான் இந்த ப்ராஜக்ட்டுக்கு நீங்க சொன்ன சினேகாவையே அனுப்பலாம்னு நினைக்கிறேன்.”
“சார், சினேகா ரொம்ப ஜூனியர். இரண்டு வருஷம் அனுபவம் தான் அவளுக்கு இருக்கு.”
“இருக்கட்டும் ருத்ரா! இத்தனை வருஷமா ஜே.யூ க்ரூப்ஸ் கிட்ட இருந்து சின்ன ப்ராஜக்ட் கூட நம்மால வாங்க முடியலை. ஆனால் நீங்க சொல்ற ஜூனியரான சினேகா தன் திறமையால நமக்கு ப்ராஜக்ட் வாங்கி கொடுத்ததோட மட்டும் இல்லாம, அஸ்வத் மாதிரி ஒரு பிக்-ஷாட்டோட பாராட்டையும் வாங்கி கொடுத்திருக்கா. ஸோ, என்னோட சாய்ஸ் சினேகா தான்.”
“உங்க சாய்ஸ் சினேகான்னா எனக்கும் ஓகே சார்!”
“குட்! ஆகாஷ் அவரோட ஆஃபிஸ்க்கு நேரா வந்து வேலை செய்யனும்னு சொல்லி இருக்கார். ஸோ, வர திங்கள்ல இருந்து சினேகாவை டெப்யூடேஷன்ல போடுங்க. அவங்களை ஆகாஷ் கம்பெனில மன்டே மார்னிங் நேரா ரிப்போர்ட் செய்ய சொல்லுங்க. ஆகாஷ் ரீடேயிலர்ஸ் பெரிய கம்பெனி. அந்த கம்பெனி பத்தி அவங்களுக்கு எடுத்து சொல்லி ப்ராஜக்ட்டை நல்லா செய்ய சொல்லுங்க. இந்த வீக் சம்டைம் என்னையும் வந்து மீட் செய்ய சொல்லுங்க!”
“ஓகே சார்!”