✽✽✽
வெள்ளிக்கிழமை மாலை!
பிரகாஷ் – சுபாஷினி – ஆகாஷின் இல்லமான ‘சுபிஷா’ மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது.
பெரிய அளவில் இல்லாமல் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டுமே பிரகாஷ் மற்றும் வசீகரன் குடும்பத்தினர் அன்றைய விழாவிற்கு அழைத்திருந்தனர்.
வந்திருந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்த ஆகாஷ் கிரே நிற சூட்டும், பேன்ட்டும் அணிந்து கம்பீரமாக இருந்தான்.
அகிலா உட்பட மற்ற தோழிகள் புடை சூழ இருந்த அக்ஷ்ரா மஞ்சள் நிறத்தில் பச்சை பார்டர் இருந்த கோட்டா சில்க் சேலையில் அப்சரசாக தெரிந்தாள்.
இத்தனைக்கும் சிம்பிளான விழா என்பதால் அவள் அதிக நகைகள் கூட அணிந்திருக்கவில்லை.
அவள் கண்களில் இருந்த ஒளியும், உதடுகளில் இருந்த சிரிப்பும், முகத்தில் இருந்த மலர்ச்சியுமே வைரத்திற்கு போட்டியாக அவளை ஜொலிக்க வைத்திருந்தது.
பெரும்பாலனவர்கள் வந்த உடன் நல்ல நேரத்திற்குள் மோதிரம் மாற்றி விட வேண்டும் என்று முடிவு செய்து அன்றைய விழாவிற்கென தோட்டத்தில் அமைத்திருந்த தற்காலிக மேடை மீது ஏறி பேசினார் பிரகாஷ்.
“ஃப்ரென்ட்ஸ், உங்க எல்லோருக்கும் தெரியும் இன்னைக்கு என் மகன் ஆகாஷோட பிறந்த நாள். இந்த இனிமையான நாளிலேயே ஆகாஷுக்கும் என்னோட பெஸ்ட் ஃப்ரென்ட் வசீகரனோட மகள் அக்ஷ்ராவுக்கும் நடக்க இருக்க கல்யாணத்தை மோதிரம் மாத்தி அஃபிஷியலா அனவுன்ஸும் செய்ய போறோம். உங்க எல்லோருடைய வாழ்த்துக்களும்,