ஆசீர்வாதமும் எங்க குழந்தைகளுக்கு வேணும்...”
பிரகாஷ் பேசி முடிக்கவும் அனைவரும் கை தட்டி தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்தார்கள்.
சிலர் ஆகாஷிடம், சிலர் அக்ஷராவிடம், சிலர் அவர்களின் பெற்றோர்களிடம் தங்களின் வாழ்த்தை பகிர்ந்தார்கள்.
வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு குடும்பத்தினர் அனைவரும் மேடை மீது வரவும், ஆகாஷ் சுபாஷினி எடுத்துக் கொடுத்த மோதிரத்தை அக்ஷ்ராவின் விரல்களில் அணிவித்தான்.
அக்ஷராவும் ஜோதி கொடுத்த மோதிரத்தை ஆகாஷின் விரலில் அணிவித்தாள்.
தொடர்ந்து சுபாஷினி அக்ஷராவிற்கு வளையல்கள் அணிவிக்க, வசீகரன் ஆகாஷிற்கு தங்க செயினை பரிசாக அணிவித்தார்.
இதில் ஒன்றையும் விடாமல் அக்ஷராவின் கேமராவில் ‘க்ளிக்’கி கொண்டிருந்தான் கணேஷ்.
அகிலா அவனை எரிச்சலுடன் பார்த்தாள்.
“எதுக்குடி என்ன பார்த்து முறைச்சிட்டே இருக்க?”
“எனக்கு இந்த எங்கேஜ்மென்ட் பிடிக்கவே இல்லடா ராம்போ!”
கணேஷ் அகிலாவை சந்தேகத்துடன் பார்த்தான்!
“உனக்கு ஆகாஷ் மேல லவ்வு கிவ்வு ஏதாவது????”
“அடச்சீ, வாயை கழுவு! அதெல்லாம் ஒண்ணுமில்ல... என்னவோ ஆகாஷ் அக்ஷ்ரா கல்யாண அரேஞ்ச்மென்ட் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கலை.”
“அகிலா நீ அக்ஷராக்கு நல்ல ஃப்ரென்ட்! ஆனால் அதுக்காக இப்படியே சொல்லிட்டு இருக்குறது