சரி இல்லை. அக்ஷ்ரா ஒன்னும் பயந்து போயோ, பிடிக்காமலோ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலை...”
“ம்ம்ம்ம்... அதென்னவோ சரி...”
“அதே போல ஆகாஷ் கிட்ட நாம கம்ப்ளெயின்ட் சொல்ற மாதிரி எந்த பழக்கமும் இல்லை. உண்மையா சொன்னா, எங்கே தேடினாலும் கிடைக்காத மிஸ்டர் பர்ஃபக்ட் அவர்!”
“ம்ம்ம்ம்... உண்மை தான்...”
“அதனால இனிமேலாவது இப்படி எதையாவது சொல்லி அக்ஷராவை குழப்பாம இரு...”
“நீ சொல்றது சரி தான்,” என்ற அகிலாவின் மனம் இப்போது முன்பை விட அதிகமாக குழம்பி போயிருந்தது!!!
✽✽✽
ஆகாஷ் சற்று தொலைவில் அக்ஷ்ராவிடம் நெட்டி முறித்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த அம்மாவை கண் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
இந்த திருமண பேச்சு ஆரம்பித்தது முதலே அம்மாவின் முகம் அதிக மலர்ச்சியுடன் இருப்பது அவனுக்கு தெளிவாகவே புரிந்தது. அது அவனுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தது.
அவனுக்கு திருமணம், மனைவி என்று பிரத்தியேகமான பெரிய கனவுகள் எதுவும் இல்லை...
மனதில் ஓடிய எண்ணங்களுடனே பார்வையை திருப்பினான்.
அங்கே விழாவிற்கு என்று போட்டிருந்த விளக்குகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலவு!
ஹப்பா என்ன ஒரு ஜொலிப்பு.... என்று எண்ணியபடி வானத்தை பார்த்தான் ஆகாஷ்.