(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 36 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ந்திதாவின் கோபம் எல்லாம் துளசியை அசைக்கவில்லை! பேருக்கு கண்ணை உருட்டி விட்டு, “ஹ்ம்ம்... இன்ட்ரஸ்டிங்... ஆனா அது ரூமர் தானா என்ன?” என்று கேலி மின்ன வினவினாள் துளசி.

   

“ப்ளீஸ் துளசி, திரும்ப ஆரம்பிக்காதே,” என நந்திதா அலுத்துக் கொள்ளவும்,

   

“ஓகே, ஓகே, சாரி... அந்த டாபிக் வேண்டாம்... நாம வேற ஏதாவது பேசலாம்... அருணா எப்.பில அனுப்பின போட்டோ பார்த்தீயா? மேடம் என்னமா வெயிட் போட்டுட்டாங்க,” என்று பேச்சின் திசையை மாற்றினாள் துளசி.

   

“ம்ம்ம்ம்...”

   

“ஆனாலும் நல்லா தான் இருக்கா...”

   

நந்திதாவின் மனதை இயல்பாக்க என்று நேரம் செலவிட்டு, அவளிடம் ஏதேதோ கதை பேசிய துளசி, உதயிடம் ஃபோன் செய்து பேசும் தன் திட்டத்தை மறந்தே போனாள்...!

   

துளசி ‘குட் நைட்’ சொல்லி கிளம்பி சென்ற பிறகும் நந்திதா தூங்காமல் அமர்ந்திருந்தாள். அவள் சென்னை வந்த முதல் நாள் முதல் நடந்தவற்றை யோசித்து பார்த்தவளுக்கு, உதயுடன் அவளின் முதல் சந்திப்பு தொடங்கி அனைத்துமே நன்றாக  நினைவில் இருந்தது... அவனுடன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்... அவன் அவளிடம் சொன்ன ஒவ்வொரு வரியும் கூட நினைவில் இருந்தது!!!

   

அன்று எக்ஸிபிஷனில் உதய் அவளின் அருகில் இல்லாமல் இருந்திருந்தால் அவளால் அந்த சர்க்யூட்டை சரி செய்திருக்க முடியுமோ என்னவோ...

   

யோசிக்க யோசிக்க அவளுக்கு ‘எதுவோ’ புரிந்தது...!

   

ஆனால் அந்த ‘எதுவோ’வும் அவளுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது...! இது சரியில்லை என முடிவு செய்தவள், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாள்...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.