✽✽✽
மறுநாள் ஆஃபிஸை அடைந்த நந்திதா, உடனே முடிக்க வேண்டிய ஒரு சில முக்கிய வேலைகளை முடித்து விட்டு, கைப்பையுடன் உதயின் அறை நோக்கி சென்றாள்.
கதவை தட்டி அவள் அனுமதி கேட்க, ”ஹேய் நந்திதா, கம் இன்,” என்று வாயெல்லாம் பல்லாக அவளை வரவேற்றான் உதய்.
“டேக் யுவர் சீட் நந்திதா... நானே உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன்... வாட் அ சர்ப்ரைஸ் நீங்களே வந்துட்டீங்க... சொல்லுங்க என்ன விஷயம்?”
உதயின் உற்சாக வரவேற்ப்பு நந்திதாவினுள் என்னவோ செய்தது!!! அவள் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பிக்க தயக்கமாக இருக்கவே,
“சொல்றேன் உதய்... முதல்ல நீங்க என்ன சொல்ல நினைச்சீங்கன்னு சொலுங்க,” என்றாள்.
அவளை ஆர்வத்துடன் பார்த்த உதய், “தேங்க்ஸ் நந்திதா... எனக்கு உங்க கிட்ட சொல்ல இரண்டு விஷயம் இருக்கு... ஒன்னு பர்சனல்... இன்னொன்னு அஃபிஷியல்... எதை ஃபர்ஸ்ட் சொல்லன்னு சொல்லுங்க,” என்றான்.
‘அஃபிஷியல் விஷயம் என்று சொல்.... சொல்...’ என்று மூளை கத்த கத்த... அதற்கு அடிப்படியாமல் இதயத்தின் ‘பர்சனல் விஷயத்தை கேள்’ என்ற கட்டளைக்கு கட்டுப்பட்ட அவளின் உதடுகள், “பர்சனல் விஷயம் சொல்லுங்க,” என்றது மெல்ல...
உதயின் முகத்தில் இருந்த மலர்ச்சி அதிகமானது!
“வாவ்! தட் இஸ் அ பாசிடிவ் சைன்... அஃபிஷியல் விஷயம் தான் கேட்பீங்கன்னு நினைச்சேன்... ம்ம்ம்ம்... அந்த பர்சனல் விஷயத்தை ஆஃபிஸ் ரூம்ல இருந்து பேச முடியாது... வாங்களேன், லெட்ஸ் கோ ஃபார் அ வாக்...”