(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 37 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ந்திதா அவளின் மனசுக்குள்ளே எழுந்த வலியை மறைத்துக் கொண்டு, கைப்பையில் தேடி ஒரு காகிதத்தை எடுத்து உதயின் பக்கம் நீட்டினாள்.

   

“என்ன இது???” என்றான் உதய் குழப்பத்துடன்.

   

“என்னோட ரெசிக்னேஷன் லெட்டர்...”

   

“நதி...!”

   

“ப்ளீஸ் கால் மீ ஆஸ் நந்திதா...! சாரி உதய், நீங்க சொன்னது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு... இப்படி ஒரு எண்ணம் உங்க மனசுல இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கலை... அருவெறுப்பா இருக்கு... உங்களை போய் நல்லவர்ன்னு நினைச்சு... ச்சே...”

   

நந்திதாவிடம் இருந்து உடனடியாக பாசிட்டிவான பதிலை எல்லாம் உதய் எதிர்பார்த்திருக்கவில்லை... திகைத்துப் போவாள்... தயங்குவாள்... என்று தான் நினைத்திருந்தான்...

   

நந்திதாவின் இந்த சீற்றம் அவன் எதிர்பார்க்காதது!!!

   

உதயின் முகத்தில் வந்த அடிப்பட்ட பாவம் புரிந்து நந்திதாவிற்கும் வலித்தது... அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனின் முகத்தில் மாற்றம் தோன்றியது...

   

“ஆனால் நந்திதா, எப்படி ரெசிக்னேஷன் லெட்டர் ரெடியா வச்சிருந்த... வச்சிருந்தீங்க??”

   

இது தானா???

   

அவளுக்குள்ளே ஏற்பட்ட ஏமாற்ற உணர்வு நந்திதாவிற்கே கோபத்தை கொடுத்தது...! என்ன தான் எதிர்பார்க்கிறாள் அவள்????

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.