இதனால இம்பாக்ட் ஆக விட மாட்டார்... மொத்த நஷ்டத்தை அவரே எடுத்துப்பார்... பாவம் அவர்...”
பாவம் தான்!
அவள் ராஜினாமா கடிதம் நீட்டிய போது இதை பற்றி எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற உதயை என்ன என்று சொல்வது?
“உன் முடிவை பத்தி இன்னொரு தடவை யோசி நந்திதா... பேக் அப் யாராவது இருந்தா கூட பரவாயில்லை...”
சட்டென அந்த ஐடியா நந்திதாவிற்கு தோன்றியது...!
“பேசாம யாரையாவது என்னோட பேக்-அப்’ஆ ரெடி செய்துட்டு போறேன் நாகு...”
“ஆனா, அந்த ஐடியா எல்லாம் உன்னோடது ஆச்சே? நீ கண்டுபிடிச்சது...”
“எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை... நான் உதய் கிட்ட எனக்கு ஒரு பேக் அப் பர்சனை ஐடென்ட்டிஃபை செய்ய சொல்றேன்... அவங்களுக்கு எல்லா டிடேயில்சையும் கொடுத்துட்டு போறேன்...”
இதை உடனடியாக உதயிடமும் சொல்ல வேண்டும் என்று நந்திதாவிற்கு தோன்றியது!
அவனின் காதலை தான் ஏதேதோ காரணங்களுக்காக மறுத்திருக்கிறாள்... அவனுக்கு அவளால் ஏற்படும் பண நஷ்டத்தையாவது தடுக்கலாமே...!
நாகுவிடம் சொல்லிவிட்டு, நேராக மீண்டும் உதயின் அறைக்கு சென்று கதவை தட்டினாள் நந்திதா.
“யெஸ் கம் இன்...!”