“உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே...! என்னை பார்த்தாலே அருவெறுப்பா இருக்குமே... அவ்வளவு வெறுக்குற ஒருத்தனுக்கு நஷ்டம் வந்தால் நீங்க சந்தோஷப் பட வேண்டியது தானே?”
“உதய் நான்...”
“என் மேல உங்களுக்கு ஏன் அக்கறை நதி... நந்திதா... இவ்வளவு ஃபீல் செய்து, வேலை மெனக்கெட்டு வந்து பேக்-அப் வைங்கன்னு சொல்றீங்க!!!!”
உதய் சொன்ன விதத்தில்... தடுமாறி போன நந்திதா... சுதாரித்துக் கொண்டு மெல்ல பேசினாள்...
“உங்க கிட்ட சொல்ல வந்த என்னை சொல்லனும்... தேங்க்ஸ்...”
அதை சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே செல்ல அவள் வேகமாக திரும்பி நடக்க, அவளுக்கு முன் கதவின் அருகே சென்று வழியை மறித்துக் கொண்டு நின்றான் உதய்.
“உதய் வழியை விடுங்க...”
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு இயல்பாக நின்ற உதய், அசையக் கூட இல்லை...
“என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ நதி... உனக்கு ஏன் என் மேல இவ்வளவு அக்கறை?” என்றான் உல்லாசமான குரலில்.
அவனின் கேள்விக்கு எத்தனையோ பதில்களை சொல்லலாம்...
ஆனால்... அவளின் கண்களை நேராக பார்த்திருந்த அவனின் பார்வை... அதில் இருந்த காதல்...
காந்தமாக அவளை ஈர்த்த அந்த விழிகளை மீறி நந்திதாவின் வாயிலருந்து ஒரு வார்த்தையும் வெளி வரவில்லை!