(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 20 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்காமல், கவிதாவிடம் ரேஷ்மிக்கு உணவு எடுத்துக் கொடுக்க சொன்னாள் ரோஷனி!

   

அந்த நிமிடம் தொடங்கி, அன்றைய முழு நாளுமே ரோஷனியே குழந்தையை கவனித்துக் கொண்டாள்!

   

இரண்டு நாட்கள் எடுத்திருந்த விடுப்பை பத்து நாட்களாக நீட்டித்துக் கொண்டாள்!

   

நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரோஷனியின் அம்மா பல்லவியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை! அவளின் ஒரே மகள் இன்னொருத்தியின் மகளை வேறு கவனிக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்ற,

   

“இங்கே பாரு ரோஷனி, ஏமாளியா இருக்காம புத்திசாலியா நடந்துக்கோ... எதுக்கு இப்போ இந்த பொண்ணை உன் கூடவே வச்சிருக்க??? இவ்வளவு நாள் தனியா போன்னு நான் சொன்னப்போ எல்லாம் சுமித்ராவே எல்லாம் செய்றா, செய்றா நான் ஃப்ரீயா இருக்கேன்னு சொல்லிட்டு இருந்த... இப்போ அவளே இல்லை... இனி நீ இங்கே இருந்தா, எல்லாம் உன் தலையில தான் வந்து விழும்... உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பொறுப்பு எல்லாம்??? அவர்ட்ட பேசி சீக்கிரமா வேற வீடு பார்த்துட்டு போற வழியை பாரு,” என்றாள்!

   

எப்போதும் போல தலையை ஆட்டாமல், “என்னம்மா இப்படி மனசாட்சியே இல்லாம பேசுறீங்க?” என்றாள் ரோஷனி.

   

“எனக்கா??? என்ன பேசுற நீ?”

   

“சுமித்ரா உங்க கிட்டயும் எவ்வளவு பாசமா இருப்பாங்க... அம்மா அம்மான்னு எப்படி உங்களை உபசரிப்பாங்க... பாவம்மா அவங்க...”

   

“அதுக்காக நீ அவ குழந்தையை வளர்க்க முடியுமா? நீ, உன் கணவன், உன் குழந்தைன்னு இருக்குறது தான் புத்திசாலித்தனம்!”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.