(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“இந்த நேரத்துல இப்படி எல்லாம் பேச உங்களுக்கு எப்படிம்மா மனசு வருது?”

   

“ப்ச்... உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி பேசுற?”

   

ரோஷனி யோசிப்பவள் போல சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். பின், “சுமித்ரா எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்காகன்னு சொன்னா உங்களுக்கு புரியுமான்னு எனக்கு தெரியலை... பாவம்மா ரேஷ்மி... சின்ன குழந்தை... என்னால அவ அம்மா இடத்தை முழுசா நிரப்ப முடியுமான்னு எனக்கு தெரியலை... ஆனால், அந்த குழந்தை எல்லோரையும் விட்டுட்டு அம்மா புடவை மாதிரி இருக்கேன்னு என் கிட்ட வந்தா பாருங்க, இன்னமும் என் மனசை அடைக்குது... என்னால முடிஞ்ச அளவுக்கு அவளோட அம்மாவா இருக்க முயற்சி செய்ய போறேன்,” என்றாள் மென்மையாக!

   

“என்ன சொல்ல வர நீ??? நீ பேசுறது உனக்கு புரியுதா? இது விளையாட்டு விஷயம் கிடையாது... நீ வேலைக்கு போகனும்...”

   

“கவிதாவும், அத்தையும் ஹெல்ப்பா இருப்பாங்க... வேணும்னா வேலைக்கு ஆள் கூட வச்சுக்கலாம்... பிடிக்குதோ இல்லையோ, இது தான் என் வீடு... ரேஷ்மி இனி என் பொண்ணு... இதை பத்தி எல்லாம் நான் இவ்வளவு நேரம் யோசிக்க கூட இல்லை... இப்போ நீங்க கேட்டதும் தான் எனக்கே தோணிச்சு!"

   

அதற்கு பிறகு பல்லவியின் பேச்சு எதுவும் ரோஷனியை மாற்றவில்லை! விடுப்பு நேரத்தில் பெரும்பாலான நேரம் ரேஷ்மியுடனே செலவிட்டாள். கமல் ஒரே ஒரு தடவை ரேஷ்மியின் அருகே வந்த போது கூட குழந்தை ‘அம்மா வேணும்’ என அழ தொடங்கவும், ரோஷனி குழந்தையை அவனிடம் இருந்து வாங்கி அழுகையை நிறுத்த முற்பட்டாள்!

   

எந்த விதமான திட்டமிடலும் இல்லாது திடீரென்ற ‘இன்ஸ்டன்ட்’ அம்மாவாக மாறி போனாள் ரோஷனி!

   

அவளின் இந்த புது அவதாரம் பூங்கோதைக்கும், கவிதாவிற்கும் கூட பிடித்து விட, எப்போதும் ரோஷனியின் செயல்களில் குற்றம் குறை கண்டுப்பிடிக்கும் அவர்களின் வழக்கமும் மறைந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.