கெட்டியாக பிடித்துக் கொண்டாள்!
அதை கவனித்து பதறி போனாள் பூங்கோதை!
“என்னாச்சு ஹேமா??? டெலிவரி டேட் வேற பக்கத்துல இருக்கு... இந்த மாதிரி நேரத்துல நீ ரொம்ப நேரம் நிக்க கூடாது... உன் கிட்ட நான் சுமி பத்தி எல்லாம் பேசி இருக்க கூடாது... இங்கே உட்காரு,” என ஹேமாவின் கையை பிடித்து நாற்காலியில் அமர செய்தாள்.
கொஞ்சம் நிலைமை சீராக, “அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா... நான் நல்லா தான் இருக்கேன்... ரேஷ்மிக்கு எப்போ என்ன வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க, சரியா,” என்றாள் ஹேமா.
“சரி ஹேமா... உனக்கு இருக்க அக்கறையில ஒரு சின்ன அளவாவது அவளோட அப்பாக்கு இருக்க கூடாதா?? அம்மா வேணும் வேணும்னு அந்தக் குழந்தை அழுதப்போ என்ன செய்றதுன்னு எங்க யாருக்குமே புரியலை...”
பூங்கோதை ஆதங்கப் படவும் ஹேமாவிற்கும் என்னவோ போல இருந்தது. வாடிப் போன முகத்துடன் தன் குரங்கு பொம்மையை கட்டிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ரேஷ்மியை பார்த்துக் கொண்டே,
“கமல் எப்படி இருக்கார்?” என வினவினாள் ஹேமா.
“அவனுக்கு என்ன? எல்லோர் கிட்டேயும் எப்போவும் போல எரிஞ்சு விழுந்துட்டு, ஆஃபீஸுக்கு போறதும் வரதுமா நல்லா தான் இருக்கான்! மத்தவங்களை விடு, இந்த குழந்தை கிட்டேயாவது கொஞ்சம் பேச கூடாதா??”
ஹேமாவிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசனையாக இருந்தது!
முன்பு சுமித்ரா கமலை விரும்புவது தெரிந்திருந்தாலும், ஹேமா சும்மா இருந்திருந்தால் கமல் – சுமித்ரா திருமணம் நடந்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு... சுமித்ரா அவளை நன்றாக கவனித்துக் கொள்ளும் ஒருவனை திருமணம் செய்துக் கொண்டிருப்பாள்... இந்த கொடிய