போனது.
விமலுக்கு அண்ணன் மீது இப்போதும் கூட பயமும் மரியாதையும் உண்டு! தவறான நண்பர்களுடன் சுற்றி கொண்டிருந்தவனை அடித்து, கண்டித்து திருத்தியவன் கமல் தான்! அண்ணன் மீது தனி பாசம் இல்லையென்றாலும் அவனின் மகள் மீது அவனுக்கும் பாசம் இருந்தது!
அதனால் ரேஷ்மியை அவனின் மனைவி எடுத்து வளரப்பதை கூடுதல் பொறுப்பாக பார்க்காமல், அவனும் அவளுக்கு உதவவே செய்தான்!
✽✽✽
பதினோராம் நாள் காரியம் என்று தனியாக எதுவும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கவில்லை என்றாலும், ஹேமா பூங்கோதையை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தாள்.
சுமித்ராவின் மறைவு ஏற்படுத்தி இருந்த துக்கம் அகலாமலே இருந்தாலும் தோழிக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின் காரணமாக தான் முக்கியமான வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அங்கே வந்திருந்தாள்.
ஹேமா வந்த நேரத்தில் ரோஷனி வீட்டில் இல்லை. வேலைக்கு சென்றிருந்தாள்.
ரோஷனி சுமித்ராவின் குழந்தையை அம்மாவாக கவனித்துக் கொள்வதை பற்றி பூங்கோதை சொல்லவும் ஹேமாவிற்கு அதிசயமாக இருந்தது!
“எனக்குமே ஆச்சர்யம் தான் ஹேமா! பொதுவா ஒரு சின்ன தூசியை கூட எடுத்து போட மாட்டா... தப்பி தவறி கேட்டா, பத்து பக்கத்துக்கு பேசுவா... இப்போ ரேஷ்மியை கீழ விடுறதே இல்ல... சொந்த குழந்தையை விட அதிகமான பாசத்தோட பார்த்துக்குறா... அவளுக்கும் சுமி இறந்தது மனசை பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன்...”
சுமித்ரா பற்றி பூங்கோதை பேசவும் ஹேமாவிற்குள் துக்கம் சுனாமியாக தாக்கியது! அதை தாங்க முடியாமல் தலை சுற்றுவது போல உணர்ந்தவள், பக்கத்தில் இருந்த கதவை