Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 14 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பொதுவாக கண்ணாடி போல மனதை காட்டி விடும் சரண்யாவின் முகத்தில் இருந்து இப்போது மைத்ரேயியால் எதையும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை! எனவே அந்த வேலையை விட்டு விட்டு, வெண்ணிலாவிடம் “ஆமா, அது என் அண்ணன் தான்,” என்றவள், சரண்யாவிடம், “வா சரண்யா, நாம ரூம்ல போய் பேசலாம்,” என்றாள்.
மைத்ரேயியின் அறைக்குள் வந்ததும் தான் கொண்டு வந்திருந்த பேப்பர்களை மேஜை மீது திறந்து வைத்தாள் சரண்யா.
“நேத்து ஐஐடி போயிருந்தேன் மேம்,” என தொடங்கி, முன் தினம் ஐஐடியில் கிடைத்திருந்த ஃபீட்பேக்குகளை மைத்ரேயியிடம் பகிர்ந்துக் கொண்டாள். இறுதியில், “அவ்வளவு தான் மேம்... சின்ன சின்ன கமன்ட்ஸ் தவிர நெகட்டிவா எதுவுமில்லை,” என்றாள்.
“குட்... டீமுக்கும் இந்த டீடெயில்ஸ் ஷேர் செய்திடு சரண்யா... சின்ன சின்ன கமன்ட்ஸ்ன்னு ஈசியா எடுத்துக்காம, எல்லாத்தையும் கரக்டா செய்ய சொல்லிடு,” என்றாள் மைத்ரேயி.
“ஓகே மேம்,” என்ற சரண்யா, அங்கிருந்து கிளம்பும் அறிகுறியாக மேஜை மீது அவள் விரித்து வைத்திருந்த காகிதங்களை எடுக்க தொடங்கினாள்.
மெல்லிய தயக்கத்துடன் அவளை கவனித்த மைத்ரேயி, “சாரி சரண்யா,” என்றாள்.
நிமிர்ந்து பார்த்த சரண்யா, “சாரியா? எதுக்கு சொல்றீங்க?” என்றுக் கேட்டாள்.
அந்த கேள்வியில் உண்மையாகவே புரியவில்லை என்ற தோரணை தான் இருந்தது!
“என் அண்ணன் பேசினதுக்கு, அவன் சார்பா நான் சாரி சொல்றேன்...”
“இட்ஸ் ஓகே மேம்... இப்போ எல்லாம் இது மாதிரி பேச்சை சகஜமா எடுத்துக்க பழகிட்டேன்...”
“நோ... தப்பு செய்தா ஓகே... வேற ஏதாவது ரீசன் இருந்தா கூட அதுக்காகன்னு யோசிக்கலாம்... சும்மா சும்மா இப்படி பேசினா அது சரி இல்லை...”