Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 31 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எதிரியின் வண்டியும் அருகே வர தொடங்கியது. தில்லையும் வண்டியை லாவகமாக ஓட்டினான். ஆனாலும் முடியவில்லை, சம்யுக்தாவும் வண்டியை விட்டு குதிக்கவில்லை இப்போது இவனாலும் தப்பிக்க முடியவில்லை வேறு என்ன வழி என யோசிக்கலானான்.
ஆனால் அதற்குள் எதிரியின் வண்டி பின் பக்கமாக வந்து மோதியதில் வண்டி நிலைதடுமாறியது ஆனாலும் அதை கட்டுக்குள் கொண்டு வந்து ஓட்டினான்
”சம்யுக்தா முதல்ல குதி உனக்கு ஒண்ணும் ஆகாது“
”எனக்கு பயமாயிருக்கு நான் குதிக்க மாட்டேன்“
”இப்படியே போனா ரெண்டு பேரு உயிருக்கும் ஆபத்தாயிடும், குதி என்னை நம்பு”
”நான் உன்னை நம்ப மாட்டேன், நீ கெட்டவன், அயோக்கியன்”
”என்னை திட்டற நேரம் இது இல்லை உயிரை காப்பாத்திக்க முதல்ல குதி”
”என்னால முடியாது, நான் வண்டியை விட்டு குதிச்சா பின்னாடி வர்ற வண்டியில மாட்டி நான் செத்துடுவேன், நான் குதிக்க மாட்டேன் உன்னையும் விடமாட்டேன்” என அவள் சொல்ல அவளின் பயத்தைப் புரிந்துக் கொண்ட தில்லையும் என்ன செய்வது என தெரியாமல் சட்டென வண்டியை நிறுத்தினான். அதனால் பின்னால் வந்த வண்டி தில்லையின் ஜீப்பில் மோதி நிலைதடுமாறியது, இதில் தில்லையின் ஜீப்பின் பின்பக்கம் மோசமாக அடிவாங்கியிருந்தது, பின்னால் வந்தவர்களின் வண்டியின் என்ஜின் மோதிய வேகத்தில் பழுதடைந்த காரணத்தால் அவர்களால் வண்டியை ஓட்ட முடியவில்லை
இரு வண்டிகளும் பழுதடைந்து நின்றபடியால் அதில் இருந்த ஆட்கள் இறங்கினார்கள் தில்லையும் சம்யுக்தாவை வண்டியை விட்டு இறக்கி அவசரமாக வேறுபக்கமாக ஓடினான். அவனால் முடியவில்லை ஆனாலும் ஓடினான் அவளும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினாள், அவர்களுக்கு பின்னால் ஒரு கும்பலே ஓடி வந்தது.