தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
“ரோஹினி யாரு, என்னங்குறது வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்...”
கலா சொன்னதன் நினைவில், உடனடியாக பதில் சொல்லாமல், பொறுமையாக மேஜை மீதிருந்த காலி டம்பளர்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்த சாரதா, “தெரிஞ்சவங்க வீட்டுப் பொண்ணு நிரஞ்சனா. ஒன்னு இரண்டு மாசம் இங்கே தங்குவான்னு நினைக்கிறேன்,” என்றாள் பொதுப்படையாக!
“அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா???” என்றாள் நிரஞ்சனா ஆர்வத்துடன்!
“ஹுஹும்... இல்லை... ஏன் கேக்குற?”
“கல்யாணம் ஆகாத பொண்ணை எந்த தைரியத்துல இரண்டு பசங்க இருக்க வீட்டுக்கு அனுப்பி வைக்குறாங்க???”
“எல்லாம் நீயும் நானும் காவலுக்கு இருக்கோம்ங்குற தைரியம் தான், வேறென்ன!”
“அடடா, எனக்கு அடுத்து பாடிகார்டா இருக்குற வேலை வேறயா??? ஆளை விடுங்க சாமி!”
“நான் விட்டுட்டா உன்னை விஜய் விட்ருவானா??? ஹ்ம்ம்...!!!!???”
கேலியாக கேட்டு சிரித்த சாரதாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் நிரஞ்சனா.
அவளின் சொந்த அம்மாவிடம் கூட இப்படி ஜாலியாக கதை பேசி சிரித்ததில்லை... அதென்னவோ சாரதாவிடம் சிரிப்பு, கோபம் அரட்டை என எதையுமே பகிர முடிந்தது.
விஜய்க்கும் அவளுக்கு நடுவே இருக்கும் காதல், ஒரு இக்கட்டான சூழலில் தொடங்கி மெல்ல மெல்ல மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருப்பது...
அந்த காதல் தோன்றிய காலத்தில் அதன் எதிர்காலம் பற்றி நிரஞ்சனாவிற்கு எப்போதுமே பயம் இருந்தது... அவளுடைய அப்பா ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்.