அது மட்டுமல்லாமல் சின்ன விஷயம், பெரிய விஷயம் என்ற பாராபட்சமே இல்லாமல் எல்லாவற்றையும் அவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் விரும்புபவர்...
அப்படி பட்டவர் மகளின் காதலை பற்றி தெரிந்தால்... என்ன செய்வார்????
நிரஞ்சனா மனதினுள் இந்த கவலையுடன் உழன்றுக் கொண்டிருக்க, விஜய் அவளை அவனின் அம்மாவிற்கும் அண்ணனுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான்.
மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க அவள் இருந்தால், சாரதா, அஜய் இருவருமே அவளை வெகு இயல்பாக அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டார்கள்.
அந்த முதல் சந்திப்பிலேயே விஜயின் குடும்பத்தினரை நிரஞ்சனாவிற்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
அதன் பின், அவ்வப்போது சாரதாவை சந்திக்க வீட்டிற்கு வருவாள் நிரஞ்சனா... அப்படி சந்திக்கும் போது ஒருமுறை தன் அப்பாவை பற்றிய தன் பயத்தை சாரதாவிடம் ஒப்பித்தாள்.
அவளை சமாதானப்படுத்தி அவளுடைய அப்பாவிடம் கல்யாணத்திற்கு சம்மதம் பெறும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள் சாரதா.
சொன்னது போலவே நிரஞ்சனாவுடைய அப்பாவிடம் பேசி, திருமணத்திற்கு சம்மதமும் வாங்கி விட்டாள்!
இப்போது நினைத்தாலும் நடந்தது எல்லாமே ‘fairy tale’ வகை கனவாகவே நிரஞ்சனாவிற்கு தோன்றியது!!!
எல்லாமே சுமுகமாக செல்ல... அண்ணன் அஜய்க்கு திருமணம் நடக்க காத்திருக்கிறார்கள் இந்த காதலர்கள்...