அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தது, தில்லையின் கையில் ஆயுதம் இல்லை ஆனால் துப்பாக்கியிருக்குமே என நினைத்தவள் அவனிடம்
”இப்படி ஓடறதுக்கு பதிலா உன் துப்பாக்கியால அவங்களை சுடலாம்ல, நாம தப்பிச்சிடுவோம்ல“ என சொல்ல அவனோ
”கரெக்ட்தான் ஆனா, அதுல குண்டு தீர்ந்துப் போச்சிம்மா சாரி” என்றான் அவளோ நொந்துக் கொண்டாள்
”நீயெல்லாம் ஒரு தாதா, இப்படி ஓட வைக்கிறியே கால் வலிக்குது“
”எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது, பேசாத எனர்ஜி குறையது ஓடிவா”
”இப்படி இழுக்காத பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க, நான் தனியா ஓடிவரேனே“
“பேசாம வா” என அவளை இழுத்துக் கொண்டு ஓடினான். சந்து பொந்துக்குள் என ஒடி ஒருவழியாக நடராஜர் கோயில் காம்பவுன்ட்டுக்குள் நுழைந்தான் அங்கு ஓரிடமாக சென்று நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சம்யுக்தாவும் வேகமாக மூச்சிரைக்கலானாள். இருவருமே சோர்ந்துப் போயிருந்தார்கள். அதிலும் சம்யுக்தா அங்கிருந்த பெரிய மரத்திற்குப் பின்னால் அவனை அழைத்துக் கொண்டு சென்று மறைந்துக் கொண்டாள்
”இங்க ஏன் கூட்டிட்டு வந்த“
”இந்த இடத்தில மறைஞ்சிக்கலாம், மரத்துக்கு முன்னாடி சாமி இருக்கு அந்த சாமி நம்மளை காப்பாத்தும்” என்றாள் அதைக் கேட்ட தில்லையோ வலியிலும் புன்னகைத்தான். அவளோ எட்டி எட்டிப் பார்த்து
”யாரும் வரலையே ஏன் என்னாச்சி அவங்களுக்கு, அவங்களும் டயர்டாயிட்டாங்களா“
”வரலைன்னு சந்தோஷப்படாம வருத்தமா படற, பேசாம இரு” என சொல்லிவிட்டு அவனும்