”புரியலை“
”நீ கருணாவையும் கஜாவையும் கைது பண்ணிட்டல்ல, அப்புறம் எப்படி எதிரிங்க வந்தாங்க”
”எனக்கென்ன ஒரு எதிரியா இருக்கான், இந்த ஊர்ல இருக்கற எல்லா ரௌடிகளுமே எனக்கு எதிரிதான், அவனவன் தன் உயிரை காப்பாத்திக்க என்னை கொல்ல வரானுங்க”
“நீ எதுக்கு அவங்களைக் கொல்லனும்“
”இந்த ஊரை ஆளனும்னா, நாமதான் முதல்ல இருக்கனும் அதுக்கு குறுக்க வர்றவங்களை அழிக்கறது தப்பில்லையே”
”இது மோசம், அவங்களும் உன்னைப் போல கெட்டவங்கதானே அவங்க மேல கூடவா உனக்கு பரிதாபம் வரலை“
”வரலையே நான் வாழனும்னா நாலு பேரை கொன்னாலும் தப்பில்லைம்மா, அதுலயும் அவனுங்க என்ன தியாகிகளா, எல்லாருமே கெட்டவனுங்கதானே, எப்படியும் போலீசால என்கவுன்டர்ல சாவானுங்க, அதுக்குப்பதிலா நான் அவனுங்களை கொன்னேன்னு வையேன், பெரிய தாதாவா நான் ப்ரமோஷன் ஆயிடுவேன், என்னோட மதிப்பு உயரும், இந்த ஊரே என்னை நினைச்சி பயப்படும்”
”அப்ப கூட நான் உன்னை பார்த்து பயப்பட மாட்டேன்”
”அதானே நீ பயந்திட்டாலும், அதை நான் பார்த்துட்டாலும் விட்டா என்னை பயமுறுத்தி விரட்டுவ, இனிமேலயாவது நான் சொல்றதைக் கேளு நாளுக்கு நாள் என்னை கொல்ல எதிரி ஆளுங்க வர ஆரம்பிச்சிட்டாங்க, நீ இங்க இருக்காத, கிளம்பும்மா, உன் ஊருக்குப் போ இங்கிருக்கற ஆளுங்களை கொன்னுட்டு நான் பெரியாளானதும் நானே உன்னை தேடி வந்து உன் வீட்டாளுங்க முன்னாடி மன்னிப்பு கேட்கறேன், போதுமா கோயில்ல வைச்சி சத்தியம் பண்ணி சொல்றேன், இப்ப நான் சொன்னதை செய்றேன், நம்பு, தயவு செஞ்சி உன் அப்பாகிட்ட