(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

பார்த்தான், யாரும் வரவில்லை, அதில் அவன் தரையில் அமர்ந்து மரத்தில் சாய்ந்துக் கொள்ள அவளோ அலறினாள்

   

”ஏய் இது கோயில் இப்படியெல்லாம் சாய கூடாது தப்பு”

   

”கோயில் அங்க இருக்கு நாம உள்ள போலயே, அதனால தப்பில்லை சாமி நம்மளை கோச்சிக்காது பேசாம உட்காரு” என சொல்ல அவளோ அமைதியாக அமர்ந்தாள்.

   

அந்நேரம் அவனுக்கு போன் வந்தது.

   

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி 

   

”இது வேற நேரம் கெட்ட நேரத்தில கத்துதே” என புலம்பிக் கொண்டே போன் எடுத்துப் பேசினான்

   

”ஓ சித்தா நீயா அடேய், உன்னை யாரு பாட்டிகிட்ட எல்லாத்தையும் சொல்லச் சொன்னது, அப்படியா, பாட்டிகிட்டயா வேணாம்டா, என்னால முடியலை, இப்ப என்னால பாட்டியோட பேச முடியாது, நானா நான் இங்க கோயில்ல இருக்கேன், எதுக்கா சும்மா சாமி கும்பிட வந்தேன், டேய் விவரம் தெரியாம பேசாதடா, என்னை கொல்ல ஆளுங்க வந்துட்டானுங்க உடனே நம்ம ஆளுங்களை நடராஜர் கோயில்கிட்ட அனுப்பு, சீக்கிரம், பாட்டிக்கு இந்த விசயம் தெரிய வேணாம்” என அவன் சொல்வதற்குள் போனை கட் செய்தான் சித்தன்

   

”இவன் வேற நான் சொல்றதை முழுசா கேட்கவே மாட்டான். நடக்கறத அப்படியே பாட்டிகிட்ட சொல்லி என்னை மாட்டிவைப்பானே, இவனை நேர்ல பார்த்தா வெளுத்துடனும்” என திட்டியபடியே அவளைப் பார்த்தான். அவளோ அவனை சந்தேகமாகப் பார்த்தாள்

   

”ஏன் அப்படி பார்க்கற”

   

”ஆமா நம்மளை எப்படி எதிரிங்க கண்டுபிடிச்சாங்க“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.