(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

உதயின் குரலில் இருந்த மாற்றம் அவளுக்கு புரிந்தது... மனதுக்கு வருத்தமாகவும் இருந்தது!

   

நந்திதா அறையின் உள்ளே செல்ல, உதய் அவளை அமைதியாக பார்த்தான்...

   

வா என்றும் சொல்லவில்லை... என்ன என்றும் கேட்கவில்லை...!

   

ஆனாலும் நந்திதாவே பேசினாள்!

   

“எனக்கு அப்புறம் யார் R&D டிபார்ட்மென்ட் ஹான்டில் செய்ய போறாங்கன்னு சொன்னீங்கன்னா நான் அவங்களுக்கு எனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லிட்டு போறேன்...”

   

அவளை நோக்கி வெற்று பார்வை ஒன்றை வீசிய உதய், நாற்காலியில் இருந்து எழுந்து அவளின் அருகே வந்தான்.

   

“அதெல்லாம் தேவையில்லை... அந்த டிபார்ட்மென்ட் இனி அவசியமில்லை...”

   

“ஓ! அதனால நிறைய நஷ்டம் வருமே...”

   

“கம்பெனி நடத்தினா லாபம் நஷ்டம் எல்லாம் சகஜம்... அதை பத்தி எல்லாம் நீங்க கவலை பட வேண்டாம்....”

   

“இல்லை... உங்களுக்கு கோடி கணக்குல நஷ்டம் வரும்ன்னு நாகு சொன்னாங்க...”

   

சட்டென்று உதயின் கண்களில் மின்னல் மின்னி மறைந்தது... அதன் காரணம் நந்திதாவிற்கு புரியவில்லை!

   

“நாகு எனக்கு நஷ்டம்னு சொன்னதால கேட்க வந்தீங்களா???”

   

“ஆமாம் என்னால ஏன் உங்களுக்கு நஷ்டம் வரணும்னு...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.