“என்னது???”
“ஆமாம் நாகு! இன்னைக்கு தான் என் ரெசிக்னேஷன் லெட்டரை உதய் கிட்ட கொடுத்தேன்...”
“என்னம்மா இவ்வளவு ஈசியா சொல்ற? உதய் என்ன சொன்னார்?”
“ஒன்னும் சொல்லலை...”
“நீ மட்டும் வேலையை விட்டுட்டு போனா ரொம்ப கஷ்டம் நந்திதா...”
“கஷ்டமா?? யாருக்கு?”
“எல்லோருக்கும் தான்! இந்த R&D டிபார்ட்மென்ட்க்கு உன்னை நம்பி எத்தனையோ கோடி இன்வெஸ்ட் செய்திருக்கார் உதய்...”
“ஆனால் இன்னமும் எல்லாம் இனிஷியல் ஃபேஸ்ல தானே நாகு இருக்கு?”
“யெஸ்.... ஆனால் அந்த பெரிய ப்ராஜக்ட் கிடைச்சிருக்கு... நிறைய பேரை ரெக்ரூட் செய்ய ப்ளான் செய்தாச்சு... இன்னும் equipment, systems, office space இப்படி எவ்வளவோ... இது எல்லாமே உன்னை டிபென்ட் செய்து செய்தது... அந்த ரோபோ பின்னாடி இருக்க ப்ரெயின் நீ தானே! உன்னை நம்பி உதய் பேக்-அப் பத்தி கூட யோசிக்கவே இல்லை... என்ன நந்திதா இப்படி திடீர்னு சொல்ற?”
“அவ்வளவு இன்வெஸ்ட் செய்திருக்காரா????”
உதய் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவள் இழக்க போகும் அவனின் அன்பின் அளவையும் அவளுக்கு எடுத்து உரைக்க, நந்திதாவின் குரல் தளுதளுத்தது...
“ஆமாம்... எனக்கு உதய் பத்தி தெரியும்... அவர் கம்பெனியை, மத்த எம்ப்ளாயீசை எல்லாம்