(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“ரெடியா எல்லாம் வச்சிருக்கலை... நான் பெங்களூருக்கே போயிடலாம்னு முடிவு செய்து இருக்கேன்... அதை உங்க கிட்ட சொல்லி ரிசைன் செய்யலாம்னு தான் உங்க ரூம்க்கு வந்தேன்...”

   

“நதி...”

   

“டோன்ட் கால் மீ லைக் தட்...”

   

“சாரி.... நந்திதா.... இந்த R&D டிபார்ட்மென்ட்,” என்று எதையோ சொல்ல தொடங்கிய உதய் அதை பாதியில் நிறுத்தி விட்டு,

   

“ப்ச்... அது முக்கியமில்லை... ஸோ, என் மனசை சொல்றதுக்கு முன்பே ரிசைன் செய்யும் முடிவோட வந்த்திருக்கீங்க! குட்...! குட்! தேங்க்ஸ்,” என சொல்லி விட்டு அவளை விட்டு விலகி நடந்து சென்றான்.

   

நந்திதா அசையாமல் அதே இடத்தில் நின்றிருந்தாள்... சுள்ளென அடித்த வெயிலும் கூட அவளை அசைக்கவில்லை...

   

எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ, “நந்திதா! ஹலோ நந்திதா,” என்ற நாகுவின் குரல் தான் அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

   

“என்ன நந்திதா, வெயில்ல நின்னு காயனும்னு ஏதாவது வேண்டுதலா??? எல்லோரும் வெயிலை பார்த்து பயந்து ஓடிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்கேயே நின்னு தவம் இருக்க???”

   

“இல்லை நாகு... நான் பெங்களூர் போறதை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்...”

   

“பெங்களூரா? லீவ்ல போறீயா?”

   

“இல்லை, வேலையை விட்டுட்டு போறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.