(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“இல்லை உதய்... அப்புறமா...”

   

“நோ நோ நந்திதா... ஒரு விஷயத்தை ஆரம்பிச்சுட்டா அதை முடிச்சே ஆகனும்.... வாங்க வாங்க... இட் வோன்ட் டேக் லாட் ஆஃப் டைம்...”

   

என்ன தான் சொல்ல போகிறான் என்று கேட்டு விடுவோமே... என்ற முடிவுடன், சரி என்று ஏற்றுக் கொண்டு அவனுடன் நடந்தாள் நந்திதா...

   

ஆஃபிஸ் கட்டிடத்தை சுற்றி அமைக்க பட்டிருந்த நடை பாதையில் இருவரும் மெல்ல நடந்தார்கள்...

   

“என்னமா வெயில் அடிக்குது நந்திதா...”

   

“ம்ம்ம்ம்...”

   

“இந்த பூ அழகா இருக்கு தானே நந்திதா...”

   

நந்திதா பதில் சொல்லாமல் உதயை பார்த்தாள்...

   

உதயிடம் கீற்றாக சின்ன புன்னகை தோன்றியது...!

   

“இப்படி அறுவை போட நாம வரலை தான்... ஆனால் நான் சொல்ல போறதுக்கு உங்களை கொஞ்சம் ரெடி செய்து வைக்கலாம்னு நினைச்சேன்...”

   

“அப்படி என்ன உதய்??”

   

நடப்பதை நிறுத்தி விட்டு நந்திதா பக்கம் திரும்பினான் உதய்...!

   

நந்திதாவினுள் மெல்லிய படபடப்பு ஏற்பட்டது... என்ன சொல்ல போகிறான்???

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.