(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 38 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

பௌர்ணமி நிலவு அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அதையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நந்திதாவால் தான் அதை ரசிக்க முடியவில்லை!

   

அவள் மொபைலில் இருந்து ஏதோ பாடல் பாடிக் கொண்டிருந்தது... அவளுக்கு பிடித்து அவள் சேவ் செய்து வைத்திருக்கும் பாடல் தான்... ஆனாலும் ரசிக்க தோன்றவில்லை...!

   

அவள் நினைவு முழுவதையும் உதய் ஆக்கிரமித்திருந்தான்...

   

கண்கள் மின்ன, “என் மேல உங்களுக்கு ஏன் அக்கறை நதி....?” என்றுக் கேட்டவனையே சுற்றிக் கொண்டிருந்தது அவளின் மனம்...!

   

வேறு எதையேனும் நினைத்து மனதை திசை திருப்பும் எண்ணம் கூட அவளுக்கு எழவில்லை... அவ்வளவு ஏன், அவள் எப்போதும் விரும்பி படிக்கும் அம்மாவின் டைரியை கூட படிக்க மனம் வரவில்லை... ஏதோ உலகமே ‘pause mode’ற்கு சென்று விட்டதை போல இருந்தது...

   

“நந்து...”

   

கதவை திறந்து அழைத்தப்படி வந்த துளசி, நந்திதாவின் அருகே வந்து அமர்ந்தாள்.

   

நந்திதாவின் வாடி இருந்த முகம் அவளுக்கு கவலையை கொடுத்தது...! உதயிடம் பேச காலையில் இருந்து பல முறை முயன்று விட்டாள்... அவன் ஃபோனை எடுக்காமல் அவளை கடுப்பேற்றிக் கொண்டிருந்தான்...

   

“என்னடி இன்னும் டல்லா இருக்க? அவங்க திட்டிட்டு போய் ஒரு நாள் ஆச்சே இன்னுமா அதையே யோசிச்சுட்டு இருக்க? நமக்கெல்லாம் ஸ்கின் ரொம்ப திக் ஆச்சே???? எப்படி இவ்வளவு சென்சிடிவ் ஆன????” கேட்டபடி விளையாட்டாக தோழியின் கையை எடுத்து சோதனை செய்வது போல பார்த்தாள் துளசி.

   

“போ ஒசிமம்! உன் ப்ளேட் கேட்குற மூட்ல நான் இல்லை. போ, போய் உன் அத்தையோட 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.