“குழம்பி போய் இருக்கீயா? லூசுடி நீ! ரிசைன் செய்ய போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தையாவது சொன்னியா?”
“அடிப்பாவி! உதய் லவ் செய்றேன்னு சொன்னாருன்னு சொல்றேன்... உனக்கு அது முக்கியமா தெரியலையா??? வேலை தான் முக்கியமா?”
“அந்த பாயின்டுக்கு அப்புறம் வரேன்... முதல்ல ஏன் வேலையை ரிசைன் செய்ய முடிவு செய்தேன்னு எனக்கு சொல்லு...”
“இல்லை துளசி... நான் இங்கே உன் வீட்டுல தங்கி இருக்கேன்... உதய் உனக்கு ரிலேட்டிவ்... என்னால எதுக்கு தேவை இல்லாமல் உனக்கும், உன் ஃபேமிலிக்கும் பிரச்சனைன்னு நினைச்சேன்...”
“சரி, அப்போ ஹாஸ்டல்ல தங்கிக்குறேன்னு எங்க கிட்ட சொல்லி இருக்கனும்... வேலையை ஏன் ரிசைன் செய்யனும்????”
“ப்ச்... இல்லைப்பா... உதயோட அம்மா அவ்வளவு பேசினதுக்கு மேல நான் வேற என்ன செய்றது... நான் திரும்ப பெங்களூரு போறது தான் சரின்னு தோணிச்சு...”
“யாருக்கு சரி??”
“அது... வந்து... உதயோட அம்மா பேசினதுக்காக இல்லைனாலும் இன்னைக்கு நடந்ததை வச்சுப் பார்த்தா நான் எடுத்த முடிவு சரி தானே துளசி...? இனிமேலும் தொடர்ந்து அங்கே வேலை செய்ய முடியுமா???”
“ஹும்!!!! நல்லா குழப்புறீயே நந்து!!!! ரேவதி அத்தை பேசினாங்க சரி..! உதய் ப்ரொபோஸ் செய்தான் சரி... ஆனால் உதய் மேல உனக்கு ஏதாவது இன்டரஸ்ட் இருக்கா என்ன? இல்லைல? அந்த இடம் தான் எனக்கு இடிக்குது...”