(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

செல்லம் கொஞ்சு, இல்ல சரத்துக்கு ஃபோன் செஞ்சு பேசு,” என்றாள் நந்திதா!

   

“அதெல்லாம் செய்றதுக்கு முன்னாடி என் இனிய தோழி ப்ளேட் அவுட்... சாரி, சாரி மூட் அவுட் ஆக இருப்பதை நான் சரி செய்யனுமே...”

   

“துளசி...”

   

“நந்து! நேத்து மாமா கூட டின்னர் டைம்ல உன்னை பத்தி கேட்டார்... நான் உனக்கு தலை வலின்னு பொய் சொன்னேன்... அப்போ கூட விடாம, தலைவலினா அப்படியே விட்ருவீயான்னு என்னை பார்த்து கேட்டுட்டார்...”

   

“ஹையோடா! எனக்கு இப்போ நிஜமாவே தலைவலி வந்திரும் போலருக்கே!”

   

“ஹேய் நந்து! சொல்றதை கேளு! உனக்கு மாமாவை பத்தி தெரியாது. அவர் சாப்பிடுற நேரத்துல பேச மாட்டார்... ஃபேமிலி தவிர மத்த விஷயத்துல தேவை இல்லாமல் தலை போட மாட்டார்... உதய் ரேவதி அத்தை கிட்ட கோபப் பட்டு கத்தினப்போ கூட சரத் கிட்ட தான் பேச சொன்னார்...”

   

“உதய் கோபப்பட்டாரா?”

   

“ஏன் அவருக்கு கோபமே வராதுன்னு உன் கிட்ட சொன்னாராக்கும்! சரி, அவன் பேச்சு நமக்கு எதுக்கு! நீ ஏன் இன்னும் டல்லா இருக்க? கமான் நந்து! யாராவது தப்பா நினைச்சு ஏதாவது சொன்னா அது சரின்னு ஆகிடுமா?”

   

“நேத்து அவங்க ஏன் திட்டினாங்கன்னு புரியலை ஒசிமம்... இன்னைக்கு அவங்க கோபம் ஏன்னு புரியுது...! அதான் வேலையை ரிசைன் செய்றதுன்னு முடிவு செய்துட்டேன்...”

   

“என்னது???? மண்டையிலேயே போடுவேன்! இன்னைக்கு புரிஞ்சிடுச்சாமே!!!! உனக்கு என்ன தான் இப்போ பிரச்சனை???”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.