Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 08 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சினேகா கட்டிலின் மீது ஒரு பேப்பரை வைத்து, மும்முரமாக கால்விரல் நகங்களை வெட்டிக் கொண்டிருந்தாள்.
சினேகா இருபத்தி நான்கு வயதான இளம்பெண். மிகவும் எளிமையானவள்... பேரழகி இல்லையென்றாலும் பார்த்த உடன் மனதில் பதியும் எழிலானவள்.
இப்போது மும்முரமாக கால்விரல் நகங்களை வெட்டிக் கொண்டிருப்பவளை, அதே ஹாஸ்டல் அறையில் தங்கி இருக்கும் மகாலக்ஷ்மி, பார்ப்பதும், கையில் இருக்கும் விடைத்தாள்களை திருத்துவதுமாக இருந்தாள்.
அந்த அறையில் தங்கி இருக்கும் மூன்றாவது நபரான ஷெல்லி இது எதையும் கவனிக்காமல்,
நீ தானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
என தன் மொபைலுடன் இணைந்து பாடிக் கொண்டிருந்தாள்.
கால் விரல் நகங்களை வெட்டி முடித்த சினேகா ஃபைலரை (filer) எடுத்து கை விரல் நகங்களை வடிவமைக்க தொடங்கினாள்.
இது அடுத்த சில நிமிடங்கள் சென்றது! அதன் பின் மாய்ஷரைசிங் க்ரீமை எடுத்து கை விரல்கள், பாதங்கள் என தடவினாள். அவளையே தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மகாலக்ஷ்மியின் புருவங்கள் கேள்வியால் உயர்ந்தது.
அடுத்து சினேகா நெயில் பாலிஷை கையில் எடுக்க, மகாலக்ஷ்மி கையிலிருந்த விடைத்தாள்களை கீழே வைத்து விட்டு சினேகாவின் அருகே வந்து அமர்ந்தாள்.
“என்ன செய்ற சினேகா?”