(Reading time: 8 - 15 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

“சூப்பர், அவர் என்ன சொன்னார்?”

   

“உங்க யாருடைய திறமையையும் நான் சந்தேகப் படலை. இந்த ப்ராஜக்ட் சினேகா வழியா கிடைச்சது. அதான் இந்த பொறுப்பை அவக் கிட்ட கொடுத்திருக்கேன். ஆனால் அவளால தனியா இதை செய்து முடிக்குறது ரொம்ப கஷ்டம். டீமோட முழு சப்போர்ட் வேணும். அவ சொல்ற டீடெயில்ஸ் வச்சு உங்களை மாதிரி சீனியர்ஸ் இங்கே ஐடியா செய்து ஹெல்ப் செய்ங்கன்னு, அவங்களுக்கு கொஞ்சம் ஐஸ் வச்சு பேசினார்...”

   

“அதுக்கு எல்லோரும் என்ன சொன்னாங்க?”

   

“சில பேர் ஒத்துக்கிட்டாங்க, சில பேர் ஒத்துக்கலை... சின்ன பொண்ணு கிட்ட நாங்க ரிப்போர்ட் செய்ற மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. அதுக்கு சேர்மென், சரி உங்களுக்கு பிடிக்கலைனா பேப்பர் போட்டுட்டு கம்பெனியை விட்டு போங்க, நான் இன்னும் நாலு ஜூனியர் ஆர்கிடெக்ட்ஸ் வேலைக்கு எடுத்துக்குறேன்னு சொன்னார்.”

   

“என்ன இப்படி ஹார்ஷா சொல்லி இருக்கார்?”

   

“அதான் அக்கா இப்போ பிரச்சனையே. மொத்த டீமும் வெடிக்க ரெடியா இருக்க எரிமலை போல இருக்காங்க. ஒரு சின்ன தப்பு செஞ்சேன்னு வைங்க அவ்வளவு தான் மொத்த எரிமலைக் குழம்பையும் என் மேல தூக்கி அடிச்சிடுவாங்க!”

   

“ம்ம்ம்ம்... ஆனால் நீ தப்பு செஞ்சா தானே அதெல்லாம். நீ தான் ஒவ்வொன்னையும் ஆயிரம் தடவை சரியான்னு பார்த்து பார்த்து செய்றவளாச்சே!”

   

“ஆனாலும் பயமா இருக்குக்கா!”

   

“ஹுஹும், பயம் தான் மனுஷங்களுக்கு முதல் எதிரி சினேகா. உன் திறமையை பாராட்டி கிடைச்சிருக்க வேலை இது. அப்புறம் என்ன பயம்? நல்லா செய். தன்னபிக்கையோட இரு!”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.