(Reading time: 8 - 15 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“சரிக்கா...”

   

“ஆமாம், எதுக்கு இந்த மணிக்கணக்கான நெயில் ஃபைலிங் அது இது எல்லாம்? பார்லர் போறதே வேஸ்ட் ஆஃப் டைம்ன்னு சொல்லுவ???”

   

“அது அது அதுக்கா... “

   

“என்ன?”

   

“பெரிய கம்பெனி...”

   

“சரி...”

   

“எம்.டி கிட்ட நேரா ரிப்போர்ட் செய்யனும்....”

   

“சினேகா, உனக்கு இருபத்தி நாலு வயசாகுது... இந்த வயசில எந்த அளவுக்கு அடுத்தவங்க கண்ணை உறுத்தாம இருக்கீயோ அது தான் உனக்கு நல்லது!”

   

இப்படி ஒரு வாக்கியத்தை இருபத்தி நான்கு வயதான இளம்பெண்ணிடம் அதுவும் கை நிறைய சம்பாதிக்கும் எந்த ஒரு இளம் பெண்ணிடம் சொன்னாலும் கட்டாயம் கோபப் படுவாள்... வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதினுள்ளாவது கட்டாயம் கோபப் படுவாள்...

   

ஆனால் சினேகா எள்ளளவும் கோபப் படவில்லை!

   

மகாலக்ஷ்மி ஏன் அப்படி சொல்கிறாள் என்பது அவளுக்கும் புரிந்தது.

   

“சாரிக்கா...” என்றாள் சின்னக் குரலில்.

   

“பெரிய ப்ராஜக்ட், உன்னை அங்கே நல்ல படியா ப்ரெசென்ட் செய்ய வேண்டியது முக்கியம்... செய்... ஆனால் பெரிய கம்பெனி, எம்.டி அது இதுன்னு சொல்லாதே...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.