“நெயில் பாலிஷ்க்கா... ஹி ஹி ஹி!” அசடு வழிய சொன்னாள் சினேகா.
“அது நெயில் பாலிஷ்ன்னு எனக்கு தெரியுது. என்ன இன்னைக்கு ஒரே தடபுடலா வேலை நடக்குது???”
“நாளையில இருந்து டெப்யூடேஷன்க்கா. நினைச்சாலே வயித்தை புரட்டுது. அவ்வளவு பெரிய கம்பெனி. அந்த கம்பெனியோட எம்.டி கிட்ட டைரக்டா ரிப்போர்ட் செய்யனுமாம்!”
“ம்ம்ம்... உன் டிபார்ட்மென்ட் சீனியர்ஸ் ஏதோ முயற்சி செய்றாங்கன்னு சொன்ன?”
“ஆமா, அவங்க யாருக்கும் என்னை இந்த மாதிரி பெரிய ப்ராஜக்ட்க்கு அனுப்புறது பிடிக்கலை... நான் ஜூனியர்ன்னு சொல்லி, சொல்லி குதிச்சுட்டு இருந்தாங்க.”
“அப்புறம்?”
“என் மேனேஜர் எவ்வளவோ சொன்னார். இன்ஃபாக்ட், இந்த ப்ராஜக்ட் நான் முடிச்சு கொடுத்த இன்னொரு ப்ளான் பார்த்து கிடைச்சது. அந்த ப்ளான் செய்ய சொன்னப்போ இவங்க யாருமே ரெடியா இல்லை. அந்த கம்பெனிக்காரங்க நம்ம பிளானை எடுத்துக் கூட பார்க்க மாட்டாங்கன்னு சொல்லி தட்டிக் கழிச்சாங்க. அப்படி தான் என் கைக்கு அது வந்துச்சு...”
“இப்போ மட்டும் அவங்க எல்லோருக்கும் உன் வெற்றியில ஷேர் வேணுமாம்மா?”
“ஷேர் இல்லக்கா மொத்தமா வேணுமாம். அது ஏன் என் மேனேஜர் நான் செய்த ப்ளான்ன்னு சேர்மென் கிட்ட சொன்னார்ன்னு எல்லோருக்கும் கோபம். டீம் வொர்க்ன்னு சொல்லி இருந்தா பிரச்சனை இல்லையாம்!”
“ஓஹோ, அப்புறம்?”
“அப்புறம், விஷயம் சேர்மென் காதுக்கும் போயிடுச்சு...”