“ஹ்ம்ம்ம்... சொல்றேன்...”
நந்திதா அன்று ராஜினாமா கடிதம் கொடுக்க உதயின் அறைக்கு சென்றதில் தொடங்கி அவன் கதவுக்கு குறுக்கே நின்று வழியை மறைத்தது வரை சொல்லி முடித்தாள்...
“அப்புறம்...?” என்றாள் துளசி ஆர்வத்துடன்!
“ப்ச்...” என அலுத்துக் கொண்டாள் நந்திதா!
“அடியே நந்து! முழுசா சொல்லி முடி! அப்புறம் என்ன?”
அலுவலகத்தில் நடந்தது மீண்டும் நந்திதாவின் கண் முன் தோன்றியது...
✽✽✽
நந்திதா அசையாமல், வாயை திறக்காமல் நின்றதை பார்த்த உதயின் புன்னகை விரிந்தது...
“என்ன ஆச்சு நந்திதா? திடீர்னு ஸ்டேச்யூவா மாறிட்டீங்க???”
தன்னிலை பெற்ற நந்திதா, பதில் சொல்லாமல் அவனை பார்த்து முறைத்தாள்.
உதய் இந்த முறை வாய் விட்டே சிரித்தான்.
“என்னங்க நந்திதா இப்படி முறைக்குறீங்க? அவ்வளவு பணம் இன்வெஸ்ட் செய்த நான் கூட பேக்-அப் பத்தி எல்லாம் யோசிக்கவே இல்லை. என்னை பிடிக்கவே பிடிக்காத நீங்க யோசிச்சிருக்கீங்களேன்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டேன்... அதுவும் கூட தப்பா?”
“இல்லை, தேவை இல்லாமல் யோசிச்ச என் தப்பு தான்... சாரி உ... சார்... கதவை விட்டு தள்ளி நின்னீங்கன்னா நான் போய் என் வேலையை பார்ப்பேன்...”