ரேஷ்மியை நன்றாகவே கவனித்துக் கொண்டிருக்கிறாள்!
ஆனால் கமல்...???
குழந்தை ராகவி தூங்கிய நேரத்தில் கமலின் நம்பரை தேடி எடுத்து அழைத்தாள் ஹேமா.
ரொம்ப நேரம் ரிங் ஆகி கடைசியில் “ஹலோ,” என்ற கமலின் குரல் கேட்டது.
“கமல், நான் ஹேமா பேசுறேன்! எப்படி இருக்கீங்க?”
ஒரு நீண்ட அமைதிக்கு பின், “இருக்கேன் டாக்டர்,” என்ற பதில் வந்தது!
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்டுக்கு வந்திருந்தேன், உங்களை பார்க்க வெயிட் செய்தேன், ஆனா பார்க்க முடியலை...”
“புதுசா ரெண்டு கம்பெனிக்கு கன்சல்டன்ட்டா போறேன்,” என்று இப்போதும் மொட்டையாக பதில் சொன்னான் கமல்.
“ஓ, அப்படியா? உங்க ஹெல்த்தையும் பார்த்துக்கோங்க... டைமுக்கு சாப்பிடுங்க...”
மறுபக்கம் அமைதியாக இருந்தது!
“கமல், நான் உங்க நல்லதுக்கு தான்...”
“டேக் கேர் டாக்டர்!”
ஹேமாவிற்கு அவன் சொன்னது முழுதாக கேட்கும் முன்பே மறு பக்கம் இணைப்பு துண்டாகி விட்டதன் அறிகுறியாக கீங் கீங் என்ற சத்தம் கேட்டது.
கமல் முகத்தில் அடித்ததுப் போல காலை கட் செய்தது ஹேமாவிற்கு கோபத்தை கொடுத்தது! மெல்ல உதடுகளை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்!