(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

இதற்கு மேலும் அவள் கமலுடன் பேச வேண்டுமா?? அப்படியே பேசினாலும், எப்படி பேசுவது, என்ன பேசுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது!

   

கமல் எப்போதுமே அவளிடம் அதிகமாக பேசியதில்லை... இப்போது அவனிடம் தினம் தினம் சாப்பிட்டாயா, தூங்கினாயா என்று எப்படி கேட்பது?

   

அவளுக்கும் சுமித்ராவிற்கும் இடையே இருந்த நட்பை வைத்து அவள் கமலிடம் ஒரு எல்லைக்குள்ளேயே தானே பேச முடியும்...

   

அவன் அவனின் குழந்தையை கூட சரியாக கவனித்ததாக தெரியவில்லை...

   

ஒருவேளை கமலுக்கு சைக்கியாட்ரிஸ்ட் உதவி தேவைப் படுகிறதோ?? 

   

ஆனால்... நிரந்தரமான ஒரு வேலை கிடைப்பதே கஷ்டம் என்றிருக்கும் இந்த நாளில் தன் நிதி சார்ந்த அறிவைக் கொண்டு பல இடங்களில் கன்சல்டன்ட் ஆக அவன் ‘எக்ஸ்ட்ரா’ வேலை செய்வதே அவனின் அறிவுக்கும், திறமைக்கும் இருக்கும் சான்று தானே....! அவ்வளவு திறமை நிறைந்த அறிவாளி ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான்???

   

பல கேள்விகள், குழப்பங்கள் என தனக்குள்ளே ஆழ்ந்திருந்த ஹேமா, குழந்தை ராகவி தூக்கம் கலைந்து அழவும், தன் யோசனையை விட்டு விட்டு குழந்தையின் அருகே சென்று கையில் தூக்கினாள்.

   

சின்ன ரோஜாவாக தெரிந்த அவளின் குழந்தையை பார்த்ததும் மனதில் இருந்த யோசனைகள் அனைத்தும் மறந்துப் போனவளாக குழந்தையிடம் செல்லம் கொஞ்ச தொடங்கினாள்!

   

✽✽✽

   

இருபது வருடங்களுக்கு பிறகு...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.