Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 33 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”தில்லை உங்களுக்கு அடிபட்டிருக்கு, டாக்டர்கிட்ட போகலாம் வாங்க” என அவனின் காதோரம் சொன்னாள், அப்படியாவது அவனுக்கு கேட்கும் என நினைத்தாள். அவனோ மெல்ல தலையை திருப்பினான் அதில் அவளுக்கு கூச்சமே வந்தது
”ப்ச் என் மடியில படுக்க வைச்சது தப்போ, இவர் இப்படி அசையறாரே, நமக்கு கூச்சமா இருக்கு என்ன செய்யலாம் சித்தனை கூப்பிடலாம்” என நினைத்தவள் உடனே அவனை பழையபடி படுக்க வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி
”சித்தா சித்தா” என சத்தமாக அழைக்க அவன் வரவில்லை மாறாக வேறொரு ஆள் எட்டிப்பார்த்து
”என்ன வேணும்ங்க” என மரியாதையாக கேட்க அவளோ
”அவருக்கு உடம்பு சரியில்லை”
”அண்ணாவுக்கா எல்லாம் சரியாயிடும்ங்க, நீங்க கவலைப்படாதீங்க சாப்பாடு கொண்டு வரட்டும்ங்களா”
”சரி கொண்டு வாங்க அப்புறம் அவர் ட்ரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு, கொஞ்சம் மாத்திவிடுங்களேன்”
”நீங்களே செய்ங்களேன் அவர் தப்பா நினைக்க மாட்டாரு“
”அவர் தூங்கறாரே, என்னால எப்படி முடியும்”
”ஓ சரி சரி நான் வரேன்ங்க” என சொல்லியவன் சென்றுவிட அவளோ திடுக்கிட்டாள்
”நான் எதுக்காக அவருக்கு ட்ரஸ் மாத்தனும், முடியாதுன்னு சொல்லாம ஏன் அவர் தூங்கறதா சொன்னேன், நல்லா குழம்பிட்டேன் முதல்ல நான் தெளிவாகனும்” என சொல்லியபடியே உள்ளே சென்றவள் மீண்டும் தில்லையின் முன் அமர்ந்தாள். அவனின் நிலைமையைக் கண்டு வருத்தப்பட்டாள்.