(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத்

   

This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.

  

சொன்னது போலவே ஒரு மணிக்கு ‘டான்’ என வந்து நின்றான் அஜய்.

   

“ஹப்பா, என்ன ஒரு பங்க்ச்சுவாலிட்டி கண்ணா! உன்னை பார்த்து கடிகாரத்துல நேரத்தை செட் செய்யலாம் போலருக்கே!!!!” என்றாள் சாரதா கேலியாக!

   

“செய்ங்க செய்ங்க... இப்போ கிளம்புங்கம்மா! இரண்டு மணி நேரத்துக்குள்ளே வந்திருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்,” என பரபரத்தான் அஜய்.

   

“நான் ரெடியா தான் இருக்கேன்... வா கிளம்பலாம்...”

   

சாரதாவும் அஜயும் சென்னை விமான நிலையத்தை அடைந்த போது ரோஹினி வரும் மலேஷிய விமானம் தரை இறங்கி இருந்தது.

   

விமான நிலையத்தில் இருந்த விமான பட்டியலில் விமான எண்ணை கண்டுப்பிடித்த அஜய்,

   

“நல்ல வேளை ஃப்ளைட் டிலே இல்லாம டைமுக்கு வந்திருச்சு... அந்த பொண்ணு பேரு என்ன சொன்னீங்கம்மா அவ வந்துட்டா கிளம்பிடலாம்,” என்றான்!

   

“அவ பேரு ரோஹினி,” என்ற சாரதா, கையோடு கொண்டு வந்திருந்த ‘ரோஹினி’ என்று எழுதப்பட்டிருந்த சிறு கார்ட்போர்ட்டை கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

   

இது வேறா என்று அலுத்தப் படி அம்மாவின் கையில் இருந்த கார்ட்போர்ட்டை வாங்கி தூக்கிப் பிடித்தான் அஜய்.

   

சாரதாவிற்கு ‘புல்லரித்தது’!!!! அஜயும் விஜயும் பார்த்து பார்த்து அவளுக்காக இப்படி ஒவ்வொன்றும் செய்யும் போது அவளுக்கு இதயம் கனிந்து இளகும்... மகன்களின் இந்த பாசத்தை பார்க்க கணவர் இல்லாமல் போய் விட்டாரே என்ற ஏக்கம் தோன்றும்...

   

மகன்கள் இருவருக்கும் திருமணம் ஒன்று நடந்து விட்டால் அவளும் அவளின் பொறுப்புகள் அனைத்தையும் முடித்து விட்ட மன நிறைவுடன் கணவர் இருக்கும் இடத்திற்கே சென்று 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.