சிம்பிளாக சேலையோ, சுரிதாரோ, ஜீன்ஸ்-டாப்ஸ் போல ஏதாவதோ அணிந்து, தலை முடியை கிளிப் செய்து விட்டாலே உலக அழகிகளுக்கு இணையாக ரோஹினி ஜொலிப்பாள் என்று அவளுக்கு தோன்றியது!
பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாமல் ஆஃபிசில் பாதியில் விட்டு வந்திருந்த வேலையை பற்றி யோசித்தபடியே காரை செலுத்தினான் அஜய். வீடு வந்து சேர்ந்ததும், காரை வீட்டு கேட்டின் பக்கத்தில் நிறுத்தினான்.
காரில் இருந்து முதலில் இறங்கிய சாரதா, ரோஹினிக்காக கார் கதவை நன்றாக திறந்து விட்டாள்!
சீட்டில் நகர்ந்து, திறந்திருந்த கார் கதவின் பக்கத்தில் வந்த ரோஹினியின் கண்கள் அவர்களின் வீட்டை ஆவலுடன் நோக்கியது.
அதை கவனித்த சாரதாவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
“வாம்மா... சாரி... வாங்கம்மா.. ரோஹினி! இது தான் எங்களுக்கு சொந்தமான சின்ன மண் குடிசை,” என அவளை இப்போதும் புன்னகை மின்ன வரவேற்றாள் சாரதா!
ஆமாம் குடிசை தான், என சொல்ல போகிறாள் என்று சாரதா எதிர்பார்க்க, ரோஹினி அவளை ஆச்சர்யப் படுத்தும் விதமாக ஒன்றும் சொல்லாமல் அமைதியாக காரில் இருந்து கீழே இறங்கினாள்!
இறங்கியவள், சாரதா பக்கத்தில் நிற்காமல், அங்கே வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தின் பக்கத்தில் சென்று அண்ணாந்துப் பார்த்தாள்...!
அவளின் செய்கையை கவனித்த சாரதா, “அஜய் சின்ன பையனா இருந்தப்போ அவர் வச்ச மரம் இது! அவனைப் போலவே எவ்வளவு உயரமா வளர்ந்திருக்கு!!! இப்போ எல்லாம் இதுல ஏறி தேங்காய் பறிக்க கூட ஆளு கிடைக்குறது கஷ்டமா இருக்கு! பேசாம வெட்டிட்டு வேற