சாரதா யோசனையுடன் அவளை பார்க்க, அஜய், “வேற எப்படி பேசுவாங்க?” என்றான் கடுப்புடன்!
“பேச்சுல ‘ங்க’ சேர்த்து மரியாதை கொடுத்து பேசனும்,” என்றாள் ரோஹினி கம்பீரமாக!
“என்னது??? அம்மா உனக்கு மரியாதை கொடுத்து பேசனுமா??? என்ன...”
“அஜய் அஜய்!!!! அது வேற ஒன்னும் இல்லை... ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் தவிர மீதி எல்லோரையும் அவங்க குடும்பத்துல ‘ங்க’ போட்டு தான் பேசுவாங்களாம்... சின்ன குழந்தையைக் கூட வாங்க போங்கன்னு தான் சொல்லுவாங்கன்னு கலா சொன்னா... நான் தான் மறந்துட்டேன்,” என மகனிடம் சொன்ன சாரதா, ரோஹினியிடம்,
“ரோஹினிங்க, வாங்க, நாம வீட்டுக்கு போவோம்ங்க,” என்றாள் முகத்தில் மெல்லிய சிரிப்பு மின்ன!
அஜய் சாரதா சொன்னதை முழுவதும் ஏற்றுக் கொள்ளாமல் அதிருப்தியுடன் ரோஹினியை பார்த்து கோபத்துடன் முறைத்தான். அவள் அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை!!!!
“சரி போகலாம்...” என்று இப்போதும் கம்பீரமாக சொன்னவள், அஜயிடம்,
“இந்த இரண்டு பெட்டி தான். தூக்கிட்டு வாங்க,” என்றாள்.
ஏற்கனவே கடுப்பில் இருந்த அஜய், இப்போது கொதித்துப் போனான்!
“என்னது நான் உன் பெட்டிய தூக்கனுமா????”
மீண்டும் சாரதா அவனை சமாதானம் செய்ய முயன்றாள்! “அஜய், சின்ன பெட்டி தானே? தூக்கிட்டு வந்தா என்ன? கார் நிக்குற இடம் வரைக்கும் மட்டும் தானே, எடுத்துட்டு வாப்பா...”